மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் ஒன்றுக்கு மூன்று டைட்டில் வைத்ததாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்ஜிஆர் நடிப்பில் எல்லீஸ் ஆர் டங்கன் என்பவர் இயக்கத்தில் உருவான தாசிபெண் என்ற திரைப்படம் கடந்த 1943 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு தாசிபெண் தவிர ஜோதி மலர் மற்றும் தும்பை மஹாத்ம்யம் ஆகிய இரண்டு டைட்டில் வைக்கப்பட்டதாகவும் 3 டைட்டிலுடன் போஸ்டர் அச்சடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த படத்தில் சிவபெருமான் கேரக்டரில் எம்ஜிஆர் நடித்திருப்பார். பார்வதி கேரக்டரில் எம்ஆர் சந்தானலட்சுமி என்ற நடிகை நடித்திருப்பார். இந்த படம் இரண்டாம் உலகப் போரின் போது அவசர அவசரமாக எடுக்கப்பட்டதால் மிகவும் சின்ன படமாக எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் படம் உருவாகி வந்த நிலையில் இந்த படம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக உருவாக்கப்பட்டது.
7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!
இந்த படத்தின் நாயகி பால சரஸ்வதி என்பவரை ஜமீன்தாருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயல்வார்கள். ஆனால் அவர் சிவபெருமானை வேண்டி தனது காதலர் டிஆர் மகாலிங்கத்துடன் சேர்த்து வைக்க பிரார்த்தனை செய்வார். இந்த நிலையில் ஜமின்தார் ஒரு கட்டத்தில், நாயகியை கடத்த முயலும்போது, அவரிடம் இருந்து தப்பிக்கும் நாயகி, சிவபெருமானிடம் மீண்டும் பிரார்த்தனை செய்வார்.
அப்போது சிவபெருமான் நாயகி முன் தோன்றி அவரை தும்பை மலராக மாற்றிவிடுவார். அன்று முதல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் மலராக அவர் இருப்பார். அன்று முதல் இன்று வரை சிவபெருமானுக்கு தும்பை மலரை பூஜைக்கு பயன்படுத்துவார்கள் என்று கூறப்படும் கதைதான் இந்த படமாக உருவாக்கப்பட்டது. இதற்காகவே இந்த படத்திற்கு தும்பை மஹாத்ம்யம் என்ற டைட்டிலும் வைக்கப்பட்டது.
5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!
இந்த படத்தில் என்எஸ் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி டிஎம் மதுரம் ஆகியோர்களின் காமெடி காட்சிகளும் உண்டு. பம்மல் சம்பந்த முதலியார் நடத்திய நாடகம்தான் தாசிபெண் என்ற திரைப்படமாக உருவானது. இந்த படத்தை எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கினார்.
ஏற்கனவே சில தமிழ் திரைப்படங்களை எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய நிலையில் இந்த படத்தையும் அவர் இயக்கினார். இந்த படம் அந்த காலத்தில் நல்ல வரவேற்பு பெற்ற போதிலும் இரண்டாம் உலகப் போரின் போது இந்த படத்தின் ஒரிஜினல் படச்சுருள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர் கூட அதிகமாக கூகுளில் இல்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே உள்ளது. அந்த புகைப்படத்தை மட்டுமே இந்த படத்திற்கு அடையாளமாக வைத்திருக்கிறார்கள்.
3 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த லூஸ் மோகன்.. மெட்ராஸ் பாஷையில் கலக்கிய நடிகர்..!!
இந்த படத்தில் 30 பாடல்கள் இடம் பெற்றதாகவும் அதில் சில பாடல்கள் படமாக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. மொத்தத்தில் எம்ஜிஆர் சிவபெருமானாக நடித்த இந்த படத்தை இன்றைய தலைமுறையினர் காண முடியாத நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டமே.