டான்ஸராக சினிமாவில் உழைத்து ஹீரோவாக மாறிய ஐந்து டாப் ஹீரோக்களின் லிஸ்ட்!

Published:

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருப்பது அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள். ஹீரோவின் அறிமுக பாடலில் தொடங்கி, கதாநாயகியுடன் டூயட் பாடும் பாடல் வரை பாடல்களுக்காகவே திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த திரைப்படங்களும் உண்டு. முன்னணி ஹீரோக்களின் படங்களில் வரும் குத்துப் பாடல்களுக்கு நம் வீட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி மகிழ்வது வழக்கம்.

அந்த வகையில் சிறந்த நடன இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் நாளடைவில் மக்களிடம் பிரபலமடைந்து ஹீரோக்களாக மாறிய முன்னணி ஹீரோக்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபுதேவா சினிமாவில் நடன கலைஞராக அறிமுகம் ஆகி கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வெற்றி விழா படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். அதற்கு அடுத்து படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி காதலன், ராசையா, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அடுத்ததாக நாம் பார்க்க போவது பிரபுதேவாவின் அண்ணன் ராஜசுந்தரம். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தில் ருக்மணி ருக்மணி என்ற பாடலில் நடன கலைஞராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின்பு ஜென்டில்மேன். காதலன் போன்ற படங்களில் கேமியோ தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து ஜீன்ஸ், என் சுவாச காற்றே, ஐ லவ் யூ டா, உன்னாலே உன்னாலே, எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மூன்றாவதாக பார்க்க போவது தினேஷ் மாஸ்டர். இவர் நடன இயக்குனராக மனதை திருடிவிட்டார் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு எண்டரி கொடுத்தார். இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக மாற வேண்டும் என்ற ஆசையில் 2018 ஆம் ஆண்டில் ஒரு குப்பை கதை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அடி எடுத்து வைத்துள்ளார்.

நான்காவதாக நாம் பார்க்க போவது ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பத்தில் பிரபுதேவாவுடன் சில நடனங்களை ஆடி ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றினார். அதன் பின் சில படங்களில் நடன காட்சிகளில் தோன்றிய அடுத்தடுத்த படங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆகும் அளவிற்கு இவரை வளர்த்துக் கொண்டார். அதன் பின் நடிகராகவும் இவருடைய முத்திரையை பதித்து பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கிய ஹீரோக்கள்!

ஐந்தாவது நாம் பார்க்கும் மாஸ்டர் சாண்டி. இவர் புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் கொரியோகிராபராக பணியாற்றியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பிக் கொண்டு அதன்பின் பல படங்களை டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து ஒன்று இரண்டு பாடல்களில் இவருடைய முகத்தை காட்டி நடனம் ஆட தொடங்கினார். சாண்டி மாஸ்டர் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...