5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

தமிழ் திரை உலகில் 5 வயது முதல் 50 வயது வரை சுமார் 700 படங்களில் நடித்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகை தான் சண்முகசுந்தரி. நடிகை சண்முகசுந்தரி 5 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் நடிக்க தொடங்கினார். சுமார் 750 படங்களில் அவர் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி அவர் டப்பிங் கலைஞர் மற்றும் பாடகியாகவும் இருந்து உள்ளார்

எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ரவிச்சந்திரன் கமல்ஹாசன் ரஜினிகாந்த் சரத்குமார், பிரபு, பாண்டியராஜன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் இவர் நகைச்சுவை கேரக்டரில் நடித்து உள்ளார். இவருடைய நடிப்பை பார்த்து எம்ஜிஆர் தனது அனைத்து படங்களுக்கும் வாய்ப்பு தந்தார். அதேபோல் சிவாஜி கணேசனின் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

கேபரே நடனத்தால் புகழ் பெற்றவர்.. சல்மான்கான் அப்பாவுடன் திருமணம்.. நடிகை ஹெலன் வாழ்க்கைப்பாதை..!

எம்ஜிஆர் நடித்த இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் உள்ளிட்ட படங்களிலும் சிவாஜி கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள், லட்சுமி கல்யாணம், பாபு, வடிவுக்கு வளைகாப்பு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அடிமைப்பெண் படத்தில் இவர் நடித்த கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எம்ஜிஆர் அவரது நடிப்பை பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளை படமாக இயக்கும் இயக்குனர் வி சேகரின் அனைத்து படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக நான் புடிச்ச மாப்பிள்ளை, வரவு எட்டணா செலவு பத்தணா, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், நான் பெத்த மகனே, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல் உள்ளிட்ட படங்களில் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

அபிராமி என்ற திரைப்படத்தில் கவுண்டமணியின் மாமியாராக இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் என்றும் ரசிகர்கள் மனதில் இருக்கும். நடிகையாக மட்டுமின்றி இவர் ஒரு சிறந்த பாடகி என்பது பலரும் அறியாத உண்மை. நான் புடிச்ச மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் சபரிமலையில் வண்ண சந்திரோதயம் என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பாடியது இவரா என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.

சிவாஜியுடன் 5 கேரக்டரில் நடித்த ஒரே நடிகை.. யார் இந்த விஜயகுமாரி…?

அதேபோல் மேலும் சில படங்களிலும் இவர் பாடல்களை பாடிய நிலையில் இசைஞானி இளையராஜா இவருக்கு சில பாடல்களை பாட வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக முரளி நடித்த அதர்மம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இளையராஜாவுடன் இணைந்து சண்முகப்பிரியா பாடியுள்ளார். நடிகை சண்முக பிரியாவுக்கு ஐந்து மகள்கள் உண்டு. டிகே கலா, மாலா, நீலா, மீனா மற்றும் செல்வி ஆகியோர் உள்ளனர்.

இவர்களின் டிகே கலா பின்னணி பாடகி மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகை சண்முகப்ரியா நடித்துள்ளார். மெட்டி ஒலி, கோலங்கள் உள்பட சில தொலைக்காட்சி தொடர்களிலும் சண்முகப்பிரியா நடித்துள்ளார். இவரது கலை சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது அளித்தது.

ஒரே நாளில் 2 படங்களில் அறிமுகமான நடிகை.. அறிமுகம் செய்த இயக்குனருடன் திருமணம்.. பல்லவியின் திரைப்பயணம்..!

கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கலை சேவை செய்த நடிகை சண்முகப்பிரியா கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி மே ஒன்றாம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 74. நடிகை சண்முகப்பிரியா மறைந்தாலும் அவரது காமெடி காட்சிகள் இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...