திருமணமாகி குழந்தை பெற்ற பின் காதல்.. தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது அல்போன்சா வாழ்க்கையில்..?

Published:

நடிகை அல்போன்சா திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் தனது சகோதரரின் நண்பரை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்பட்டது. கடந்த 10 ஆண்டுக்கு முன் ஊடகங்களில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகில் கிளாமர் கேரக்டரில் நடித்தவர் நடிகை அல்போன்சா. குறிப்பாக ஏராளமான படங்களில் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். சில படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

அஜித்துடன் அறிமுகம், விஜய்யுடன் 4 ஹிட் படங்கள்.. ஒரே ஒரு விபத்தில் காணாமல் போன நடிகை..!

இந்த நிலையில் அல்போன்சாவுக்கு நசீர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உண்டு. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனித்து வாழ்ந்ததாக தெரிகிறது.

alphonsa1 அப்போது தனது சகோதரரும் நடன இயக்குநருமான ராபர்ட் என்பவரின் நண்பர் வினோத்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருவரும், அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தன்னை திருமணம் செய்து கொள்ள வினோத் வற்புறுத்தியதாகவும் ஆனால் கணவரை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ய முடியாது என்பதால் காத்திருக்க அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இது குறித்த பிரச்சனை காரணமாக வினோத் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து வினோத்தின் பெற்றோர்கள் அல்போன்சாவிடம் தகராறு செய்ததாகவும் அல்போன்சா தான் அவரை கொலை செய்து விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சுனாமி பாதிப்புக்கு நிதி திரட்டிய நடிகை மரணம்.. 18 ஆண்டுக்கு முன் நிகழ்ந்த சோகம்..!

இதனால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின் குணமானார்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் கதாநாயகனாக ’கவசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அந்த படம் வெளியாகும் முன்னரே அவர் இறந்தது தான் பரிதாபமானது. இந்த சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த நிலையில் அதன் பிறகு திரைப்படத்தில் நடனம் ஆடுவதையும் அல்போன்சா நிறுத்திவிட்டார்.

ஷோபா போலவே 22 வயதில் தற்கொலை செய்து கொண்ட ஷோபாவுடன் நடித்த நடிகை..!

நடிகை அல்போன்சா நடன இயக்குனர் ராபர்ட் சகோதரி என்பதும் ராபர்ட் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...