சுனாமி பாதிப்புக்கு நிதி திரட்டிய நடிகை சிந்து.. 18 ஆண்டுக்கு முன் நிகழ்ந்த சோகம்!

கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னையில் சுனாமி தாக்கிய நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டிய நடிகை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மறக்க முடியாத ஒரு நினைவாக ரசிகர்களுக்கு உள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்வின்போது உயிரிழந்த அந்த நடிகையின் பெயர் சிந்து. இவர் நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் அக்காள் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சஞ்சய் சகோதரி தான் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷோபா போலவே 22 வயதில் தற்கொலை செய்து கொண்ட ஷோபாவுடன் நடித்த நடிகை..!

sindhu1

நடிகை சிந்து, ராம்கி அருண்பாண்டியன் நடித்த ’இணைந்த கைகள்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

அவர் நடித்த திரைப்படங்களில் ’பொண்டாட்டி தேவை’, ’புரியாத புதிர்’, ’கோகுலம்’, ’ஊர் மரியாதை’, ’சந்திரலேகா’ உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. ’சந்திரலேகா’ படத்தில் தான் அவருடைய உறவினர் வனிதா அறிமுகமானார்.

இந்த நிலையில் நடிகை சிந்து, நடிகர் ரிஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்துவின் மரணத்திற்கு பின் ரிஷி, கெளரி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்

இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சென்னையில் எதிர்பாராத வகையில் சுனாமி தாக்கியது. சுனாமி என்றால் என்ன என்று அதுவரை தமிழக மக்கள் அறியாத நிலையில், அந்த சுனாமி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புகள் எண்ணில் அடங்காமல் இருந்தது.

இந்த நிலையில் தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட வேண்டும் என முடிவு செய்த சிந்து, வீடு வீடாக சென்று நிதி திரட்டினார். அந்த நிதியின் மூலம் அவர் பல்வேறு சமூக சேவைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sindhu

ஆனால் அவருக்கு ஆஸ்துமா நோய் இருந்த காரணத்தினால் அவர் வீடு வீடாக சென்று நிதி திரட்டிய போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் நிதி திரட்டிய நடிகை சிந்து பரிதாபமாக இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்துமா நோய் அவரை தாக்கி இருப்பதால் அவர் வெளியே செல்லக்கூடாது என்றும் தூசு அவருக்கு முற்றிலும் ஒத்துக்கொள்ளாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திருந்தும் அவர் சமூக சேவைக்காக தனது உயிரையே பொருட்படுத்தாமல் அவர் ரிஸ்க் எடுத்தது பின்னர் தெரிய வந்தது.

சிந்துவின் மறைவிற்கு அன்றைய முன்னணி நடிகர்களான சரத்குமார், விஜயகுமார், ராமராஜன், பாண்டியராஜன், அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ராதிகா, லட்சுமி, ஸ்ரீ பிரியா, வனிதா உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்த நடிகர்.. இப்படி ஒரு நடிகர் இனி கிடைப்பாரா?

நடிகை சிந்துவின் வாழ்க்கை வெறும் 33 வயதிலேயே முடிந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி நடிகர் சஞ்சய் பலமுறை பேட்டிகளில் தனது சகோதரி குறித்து நெகிழ்ச்சியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...