அஜித்துடன் அறிமுகம், விஜய்யுடன் 4 ஹிட் படங்கள்.. ஒரே ஒரு விபத்தில் காணாமல் போன நடிகை..!

அஜித் படத்தில் அறிமுகம் ஆகி விஜய்யுடன் நான்கு ஹிட் படங்களில் நடித்த நடிகை ஒரே ஒரு விபத்து காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அந்த நடிகை தான் சங்கவி.

தமிழ் திரையுலகில் அஜித் அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’. சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் அஜித் நாயகனாகவும் சங்கவி நாயகியாகவும் அறிமுகம் ஆனார்கள். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் சங்கவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் ’ரசிகன்’.

ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்

sanghavi1

விஜய்யுடன் அவர் நடித்த முதல் படமான இந்த படம் 175 நாட்கள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் பொம்மை போல இந்த நடிகை நடிக்கிறார் என்று விமர்சனம் செய்த நிலையில் ’ரசிகன்’படத்தில் அவர் கிளாமர் ரோலில் நடித்ததை அடுத்து அவரை கனவுக்கன்னியாக தங்கள் மனதில் ரசிகர்கள் குடியமர்த்திக் கொண்டனர்.

’ரசிகன்’படத்தில் ஓவர் கிளாமராக நடித்த காரணத்தினால் அதன் பிறகு அவருக்கு வந்த கேரக்டர் எல்லாம் கிளாமராக இருந்தது. விஜய்யுடன் மட்டும் அவர் ’விஷ்ணு’ ’கோயம்புத்தூர் மாப்ளே’ மற்றும் ’நிலாவே வா’ ஆகிய நான்கு படங்களில் நடித்திருந்தார் என்பதும் நான்குமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சரத்குமார் நடித்த ’நாட்டாமை’, பாரதிராஜாவின் ’தாஜ்மஹால்’, ஜெயராம் நடித்த ’கோலங்கள்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவர் சுமார் 80 படங்களில் நடித்தார். அதில் 35 படங்கள் தமிழ் படங்கள். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடிகை சங்கவி நடித்துள்ளார்.

ஷோபா போலவே 22 வயதில் தற்கொலை செய்து கொண்ட ஷோபாவுடன் நடித்த நடிகை..!

தமிழ் சினிமாவில் கிளாமர் ரோலில் கலக்கி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சங்கவி ஒரு கட்டத்தில் குணசித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக பொற்காலம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

sanghavi2இந்த நிலையில் நடிகை சங்கவி கடந்த 2005 ஆம் ஆண்டு மைசூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கினார். அவரது தந்தை ஒரு மருத்துவர் என்பதால் தனது மகளுக்கு சரியான மருத்துவ சிகிச்சை செய்து அவரை காப்பாற்றினார்.

ஆனால் இந்த விபத்துக்கு பிறகு அவர் திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை. 2005ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் மொத்தம் நான்கு படங்கள்தான் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சங்கவி தனது 39 ஆவது வயதில் ஐடி துறையில் பணிபுரியும் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் அவரது திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்த நடிகர்.. இப்படி ஒரு நடிகர் இனி கிடைப்பாரா?

தற்போது அவர் பெங்களூரில் கணவருடன் செட்டில் ஆகிவிட்டதால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ’கொளஞ்சி’ என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...