நடித்தது 9 படங்கள்.. 9ம் சூப்பர்ஹிட்.. திடீரென காணாமல் போன கோடீஸ்வரரின் மகன் நடிகர்..!

Published:

தமிழ் சினிமாவில் மொத்தமே 9 படங்கள் நடித்து அந்த 9 படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்த நடிகர் ஒருவர் திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போன ஆச்சரியம் நடந்துள்ளது என்றால் அது நடிகர் ஜீவன் விஷயத்தில் தான்.

நடிகர் ஜீவன் ’யுனிவர்சிட்டி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’காக்க காக்க’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. அவரது வில்லன் வேடம் இதுவரை இல்லாத வில்லத்தனமான நடிப்பாக இருந்ததால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் விருந்தாக இருந்தது. அந்த படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படம் தான்.. திரையுலகில் இருந்து ஷாலினி விலக இதுதான் காரணமா?

jeevan1

இதனை அடுத்து அவர் ’திருட்டுப் பயலே’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு ’நான் அவன் இல்லை’ ’மச்சக்காரன்’ ’தோட்டா’ ’நான் அவன் இல்லை 2’ ’அதிபர்’ ’பாம்பாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தார். அவர் நடித்த எந்த படமும் தோல்வி படமும் இல்லை என்பதும் ஓரளவு மற்றும் சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது படங்கள் நடித்து ஒன்பது படங்களையும் ஹிட்டான படங்களை கொடுத்தவர் ஜீவன் திடீரென எதனால் காணாமல் போனார் என்பது ஒரு சுவாரசியமான கதை.

நடிகர் ஜீவன் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன். கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அவரது தந்தை நினைத்தால் ஜீவனை வைத்து பல சொந்த படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் ஜீவன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். நம்மை தேடி வரும் வாய்ப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு நடிப்போம், நாமாக போய் எந்த வாய்ப்பையும் தேட வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தவர் ஜீவன்.

அதனால்தான் அவருக்கு எந்தவிதமான வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் நடித்த ’கிருஷ்ண லீலா’ மற்றும்’ ஜெயிக்கிற குதிரை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் முடிவடைந்தும் அவை ரிலீசாகவில்லை என்பதும் அந்த படங்களை ரிலீஸ் செய்ய அவர் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

jeevan2

நடிகர் ஜீவனுக்கு எந்த விதமான கால்சீட் கோளாறு கிடையாது, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உடன் சம்பளப் பிரச்சனை கிடையாது, எந்த நடிகையுடனும் ஒரு கிசு கிசு கூட கிடையாது, அந்த அளவுக்கு அவர் தான் உண்டு தனது நடிப்பு உண்டு என்ற அளவில் இருப்பார்.

கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?

ஒரே படத்தில் எட்டு நடிகைகளுடன் சேர்ந்து நடித்த பெருமையும் ஜீவனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜீவன் நடித்து அதில் வரும் வருமானத்தில் தான் வாழ வேண்டும் என்ற நிலை இல்லாததால் தான் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்கவில்லை என்றும் சினிமாவின் நெளிவு சுழிவை அவர் புரிந்து கொள்ளாததால் அவரை திரையுலகம் மறந்து விட்டது என்றும் கூறப்படுவது.

நடிகர் ஜீவன், சூர்யாவுடன் படித்தவர் என்பது பலரும் அறியாத தகவல். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக லண்டனுக்கு சென்று நடிப்பு பயிற்சியும் படித்து வந்தவர். இவர் படித்த நடிப்புக் கல்லூரியில் பல ஹாலிவுட் நடிகர்கள் படித்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவலாகும்.

ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த மோகன்.. நடிகையின் துரோகத்தால் ஜீரோவான பரிதாபம்..!

நடிகர் ஜீவனின் குடும்பம் பற்றி திரை உலகில் உள்ள யாருக்குமே தெரியாது என்பது ஆச்சரியமான ஒரு தகவல். அவருக்கு திருமணமாகிவிட்டதா? குழந்தைகள் இருக்கிறதா? என்பதை கூட அவர் எந்த பேட்டியிலும் சொல்லவில்லை. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த கேள்விக்கும் அவர் நாகரீகமாக பதில் அளிக்க மறுத்து விடுவார் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...