திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படம் தான்.. திரையுலகில் இருந்து ஷாலினி விலக இதுதான் காரணமா?

நடிகை ஷாலினி, அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு அவர் ஒரே ஒரு படம் தான் நடித்தார். அந்தப் படத்திற்கு பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகிவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி. ’ஆனந்த கும்மி’ என்ற திரைப்படத்தில் தான் அவர் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’பிள்ளை நிலா’ ’விடுதலை’ ’ஆயிரம் கண்ணுடையாள்’ ’சிறைப்பறவை’ ’மைக்கேல் ராஜ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?

இதனை அடுத்து விஜய்யுடன் ’காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் நாயகியாக தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் மினி என்ற கேரக்டரில் அவர் நடித்து அசத்திருப்பார் என்பதும் அதன் பிறகு அவர் குறைந்தது 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் இருப்பார் என்றும் கூறப்பட்டது.

shalini ajith

இந்த நிலையில் தான் 1999ஆம் ஆண்டு அஜித்துடன் ’அமர்க்களம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவருக்குமே காதல் உண்டாகியது. இதன் பிறகு இரு தரப்பு பெற்றோர்கள் பேசி முடித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு முன்னர் ஷாலினி நடித்த ’நிறம்’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது அவர்தான் தமிழிலும் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் வலியுறுத்தினர். இதனால் அஜித் இடம் அனுமதி பெற்று அந்த ஒரு திரைப்படத்தில் மட்டும் ஷாலினி நடித்தார். அந்த படம் தான் ’பிரியாத வரம் வேண்டும்’

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் தமிழில் அந்த படம் சுமாராகவே வெற்றி பெற்றது. அதன் பிறகு இனி குடும்ப வாழ்க்கை தான் முக்கியம், சினிமாவே வேண்டாம் என்று ஷாலினி முடிவு செய்துவிட்டார். இதனால் அவர் நடித்த கடைசி படமாக ’பிரியாத வரம் வேண்டும்’ அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையான அதிசயம்.. ஒரே ஒரு காதலால் ஒட்டுமொத்த சரிவு..!

shalini

அதன் பிறகு அவருக்கு பல திரைப்படங்கள் வாய்ப்புகள் வந்தாலும் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததால் அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட அவரை நடிப்பதற்கு ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் அணுகியதாகவும் ஆனால் அஜித் கண்டிப்பாக அவர் நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜியைப் பாராட்டிய கிருபானந்தவாரியார்… என்ன சொன்னார்னு தெரியுமா?

இப்போது கூட ஷாலினி ஹீரோயின் போல் ஸ்லிம்மாக இருந்தாலும் இனிமேல் அவர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்படுகிறது. குறுகிய காலமே நாயகியாக தமிழ் திரை உலகின் நடித்தாலும் அவர் அஜித், விஜய், பிரசாந்த், மாதவன் உள்ளிட்டவர்களுடன் நடித்தார் என்பதும் அவர் நடித்தது ஒரு சில படங்களாக இருந்தாலும் அந்த படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...