கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?

கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அரவிந்த்சாமி சினிமாவில் நுழைந்தது மற்றும் ஒரு கட்டத்தில் சினிமாவை வெறுத்து மீண்டும் தொழிலதிபர் ஆனது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

நடிகர் அரவிந்த்சாமி கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனாக பிறந்தார். ஆனால் அவர் ஒரு தொலைக்காட்சி நடிகரின் மகன் என்றும், கோடீஸ்வர தொழிலதிபர் அவரை தத்தெடுத்ததாக கூறப்பட்டாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த மோகன்.. நடிகையின் துரோகத்தால் ஜீரோவான பரிதாபம்..!

அரவிந்த்சாமியின் தந்தை கோடிஸ்வரராக இருந்தாலும் அரவிந்தசாமியை அவர் மிகவும் எளிமையாகவே வளர்த்தார். செலவுக்கு குறைவாகவே கொடுப்பார். ஒழுக்கமாக தனது மகன் வளர வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.

arvind swamy

இந்த நிலையில் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை அரவிந்த்சாமிக்கு இருந்தாலும் லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த அவர் அதன் பின்னர் மாடலிங் தொழிலை தேர்வு செய்தார். அவர் நடித்த பல விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது குறிப்பாக லியோ காபி விளம்பரம் அன்றைய பலரது விருப்பத்திற்குரிய விளம்பரமாக இருந்தது.

இந்த நிலையில் தான் ’தளபதி’ படத்தில் கலெக்டர் வேடத்திற்கு லியோ காபி விளம்பரத்தை பார்த்து மணிரத்னம் அவரை தேர்வு செய்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இதனை அடுத்து மணிரத்னத்தின் அடுத்த படமான ’ரோஜா’ படத்தில் நாயகனாக அரவிந்த்சாமி நடித்தார்.  அந்த படம் அவரை அகில இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. இதனை அடுத்து அவர் நடித்த ’மறுபடியும்’ என்ற திரைப்படமும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

ஆனால் அவர் கிராமத்து கேரக்டரில் நடித்த ’தாலாட்டு’ என்ற படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அவரது முகம் மற்றும் அழகு ஒரு கிராமத்து கேரக்டருக்கு பொருத்தமாக இல்லை என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையான அதிசயம்.. ஒரே ஒரு காதலால் ஒட்டுமொத்த சரிவு..!

அதன் பிறகு ’பம்பாய்’ ’தேவராகம்’ ’மின்சார கனவு’ ’அலைபாயுதே’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார். ஒரு பக்கம் தந்தையின் பிசினஸை பார்த்துக்கொண்டு இன்னொரு பக்கம் அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இனிமேல் திரைப்படம் வேண்டாம் தந்தையின் பிசினஸை முழுவதுமாக பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தார்.

arvind swamy2

அதன் பிறகு கிட்டத்தட்ட அவர் ஏழு ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அந்த நேரத்தில்தான் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, அந்த விபத்தில் அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரால் நடக்கக்கூட முடியவில்லை, ஒரு கட்டத்தில் அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டதால் முடி கொட்டி உடல் எடையும் அதிகமானார். அப்போது அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தான் அரவிந்த்சாமியை ’கடல்’ படத்தில் மீண்டும் ரீ எண்ட்ரி செய்ய வைத்தார் மணிரத்னம். அந்த படத்தில் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை அடுத்து ’தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் அவரை பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற வைத்தது. இந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படம் ஜெயித்திருக்காது என்பதுதான் பலரது விமர்சனமாக இருந்தது.

நடிகர் அரவிந்த்சாமி 1994ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். ஏழு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்த  அரவிந்த்சாமி  ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் அவருடைய இரண்டு குழந்தைகளும் அவருடன் தான் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் 2012ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இன்று வரை அரவிந்த்சாமி தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பத்திரிகைகளில் கொடுத்ததில்லை என்பதும் குடும்பத்தினரை பொது விழாவிற்கு அழைத்துச் செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் அரவிந்த்சாமி, எஸ்ஜே சூர்யா கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் வெங்கட்பிரபுவின் அடுத்த படமான ‘கஸ்டடி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு நல்ல புகழ் பெற்று கொடுத்தது.

ஒரே படத்தில் ஜோடியாக நடித்து ஒரே மாதிரி தற்கொலை செய்து கொண்ட நடிகர்-நடிகை.. இரண்டுமே மர்ம மரணங்கள்..!

அரவிந்த்சாமி நடித்த மூன்று திரைப்படங்கள் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. அவை ’நரகாசுரன்’ ’கள்ளபார்ட் மற்றும் ’சதுரங்க வேட்டை 2’. இந்த மூன்று படத்தையும் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தீவிர முயற்சி செய்தும் சில ஆண்டுகளாக வெளியிட முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...