மூன்றாம்பிறை படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நாய்க்குட்டியை சுப்பிரமணி சுப்பிரமணி என கொஞ்சும்போது மனதில் ஆழப்பதிந்து விடுகிறார். அந்த வகையில் அந்தப் படத்தில் அவர் கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்து இருந்தார் என்றே சொல்லலாம்.
நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீஅமாயங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டியில் 13.8.1963ல் பிறந்தார்.
ஸ்ரீதேவியின் தந்தை பெயர் அய்யப்பன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் ராஜேஸ்வரி. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஸ்ரீதேவி குழந்தைப் பருவத்திலேயே தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்.
துணைவன் படத்தில் 4 வயதில் பாலமுருகன் கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். எம்.ஏ.திருமுகம் இயக்கியுள்ளார். இது சிறந்த பக்திப்படமாக உருவானது. அதேபோல அவர் ஜூலி என்ற இந்திப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
அதுமட்டும் அல்லாமல் நம் நாடு, என் அண்ணன் படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். வசந்தமாளிகை, பாரதவிலாஸ் படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.
தொடர்ந்து பல மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார் ஸ்ரீதேவி. அதன்பிறகு பாலசந்தரின் அறிமுகத்தில் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகி ஆனார். அப்போது அவரது வயது வெறும் 13தான்.
ஸ்ரீதேவி இந்திப்படத் தயாரிப்பாளர் போனிகபூரை மணந்தார். ஜான்விகபூர் என்ற மகள் இவருக்கு உள்ளார். இவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் அம்மாவைப் போல அல்லாமல் மாடர்ன் உடையில் கவர்ச்சி அம்சாவாக வலம் வருகிறார்.