அடக்கடவுளே… அம்மன் வேடம் போட்டு நடித்த நடிகைக்கே இவ்ளோ சங்கடங்களா?

பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. அந்த அம்மன் வேடம் இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. கே.ஆர்.விஜயாவை அம்மனாகவே பார்த்த ரசிகர்கள் எல்லாம் இருக்காங்க. இந்த அம்மன் வேஷத்தை ஒரு…

kr vijaya

பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா. அந்த அம்மன் வேடம் இவருக்கு மிகச் சரியாகப் பொருந்தியது. கே.ஆர்.விஜயாவை அம்மனாகவே பார்த்த ரசிகர்கள் எல்லாம் இருக்காங்க. இந்த அம்மன் வேஷத்தை ஒரு பக்கம் நான் போட்டு நடித்தாலும் பல சங்கடங்களுக்கும் நான் ஆளாகி இருக்கிறேன் என்கிறார் கே.ஆர்.விஜயா.

வெளியூருக்கு எல்லாம் நான் போகும்போது பல ரசிகர்கள் அப்படியே என் காலில் விழுவாங்க. அவங்க குறையை எல்லாம் சொல்லி அதுக்கான தீர்வை எல்லாம் கேட்பாங்க. அப்படிப்பட்ட ரசிகர்களிடம் நான் அம்மன் வேஷம் போட்டு நடிச்சேனே தவிர என்னையே கடவுளா பார்க்காதீங்கன்னு பலமுறை சொல்லி இருக்கேன்.

இந்த அம்மன் வேடம் போட்டு நடிச்சதனால வேறு மாதிரியான சங்கடங்களுக்கும் நான் ஆளாகி இருக்கேன். ஒருமுறை கபாலீஸ்வரர் கோவிலுக்கு அம்மனை வழிபடுவதற்காக நான் சென்று இருந்தேன். அப்போது நான் வரிசையில் நின்று இருந்தபோது எனக்கு முன்னால உள்ள அம்மா திரும்பி என்னைப் பார்த்தாங்க. கோவில்ல சினிமா சூட்டிங்லாம் நடத்த விட்டுட்டான்.

எப்படி நாங்க சாமி கும்பிடறது? அப்படின்னு அவங்க பாட்டுக்குக் கத்த ஆரம்பிச்சிட்டாங்க. உடனே அந்த அம்மாவை அமைதியாகத் தட்டிய நான் அம்மா நான் சூட்டிங்கிற்காக வரல. உங்களை மாதிரியே தான் சாமி கும்பிட வந்துருக்கேன்னு அந்த அம்மாவிடம் விளக்கமாக சொன்னேன். அதுவரைக்கும் கோபமாகப் பேசிய அந்த அம்மா கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது.

என்னை மன்னிச்சிக்கங்கன்னு என் கையைப் பிடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க. இது மாதிரியான பல வித்தியாசமான சம்பவங்கள் இந்த அம்மன் வேடம் போட்டு நடிச்சதனால கிடைச்சிருக்குன்னு ஒரு பத்திரிகை பேட்டியில் கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.