கலக்கலான சிவகார்த்திகேயன் காமெடி, மடோன் அஸ்வின் சீரியஸ் கதை: மாவீரன் விமர்சனம்..!

Published:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

இயக்குனர் மடோன் அஸ்வின் ’மண்டேலா’ என்ற திரைப்படம் மூலம்  திரை உலகை தனது கவனத்திற்கு திரும்பினார் என்பது தெரிந்ததே. ஒரு ஒரே ஒரு ஓட்டின் வலிமை எத்தகையது என்பதை அந்த படம் முழுவதும் காமெடி கலந்த கதையம்சத்தில் கூறி இருப்பார். இந்த படம் சிறந்த படம் என்ற தேசிய விருது பெற்றது.

உலக சுற்றுப் பயணத்திற்கு தயாரான விஜய்! ஒரே அதிரடி தான்..

Maaveeran 2

இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனுடன் மடோன் அஸ்வின் இணைந்ததை அடுத்து ‘மாவீரன்’ திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிவகார்த்திகேயனின் காமெடியான அம்சமும் மடோன் அஸ்வின் சீரியஸான கதையும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.

Maaveeran 3

பிரச்சனைகளில் இருந்து விலகாமல் மக்களை காக்க போராடுபவன் எவனோ அவனே ‘மாவீரன்’ என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. சென்னையில் காலங்காலமாக வசித்த பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்திவிட்டு மக்கள் மாளிகை என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகின்றனர். பூர்வ குடிமக்கள் வசித்த பகுதியை அரசியல்வாதிகள் கபளீரம் செய்வதற்கு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

புதிய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மக்கள் தரம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் தினம் தினம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் நிலையில், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

ஆரம்ப விமர்சனம் இவ்ளோ முக்கியமா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிராஜக்ட் கே…! ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

aditi shankar opens up about pairing with sivakarthikeyan in maaveeran 1659965487

இந்த நிலையில் அப்பாவியாக, தைரியம் இல்லாத கலகலப்பாக இருக்கும் இளைஞனாக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் திடீரென அந்த துறையின் அமைச்சர் மிஷ்கினிடம் தங்கள் பிரச்சனை குறித்து தைரியமாகப் பேசுகிறார். அப்பாவியாக கோழையாக இருந்த இவர் எப்படி மாவீரனாக மாறினார்? எப்படி அவருக்கு தைரியம் வந்தது? மக்களை அவர் காத்தாரா? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.

முதலில் கலகலப்பாக அறிமுகம் ஆகும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை போல நடித்துள்ளார். ஆக்சன் ஹீரோவாகவும் இந்த படத்தில் கவருகிறார். படம் முழுவதும் ஒரு வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பது போல் உள்ளது.

இதனை அடுத்து மிஷ்கினின் அமைச்சர் கேரக்டர் ரசிக்க வைக்கிறது. மிஷ்கினிடம் இவ்வளவு வில்லத்தனமான நடிப்புத் திறமை இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

Sivakarthikeyan-Maaveeran-Movie-First-Look-HD-Poster

நீண்ட இடைவெளிக்கு பிறகு யோகி பாபு காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகியுள்ளன. அதேபோல் சிவகார்த்திகேயன் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரிதா, தங்கை கேரக்டரில் நடித்திருக்கும் மோனிஷா ஆகியோர்களின் நடிப்பு அருமை. அதிதி ஷங்கர் கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.

’மண்டேலா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரே ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை பேசிய மடோன் அஸ்வின் இந்த படத்தில் பூர்வகுடி மக்களின் பிரச்சினைகளை அலசியுள்ளார். ஆனால் முதல் பாதியில் அவர் சொல்ல வந்த கதையை சொல்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க காமெடியாகவே படத்தை கொண்டு சென்று விட்டார். இரண்டாவது பாதியில் தான் அவர் தனது கதையை சீரியசாக சொல்ல ஆரம்பிக்கிறார் என்பது ஒரு மைனஸ் ஆக தெரிகிறது.

விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடகராக அறிமுகமாகும் அஜித்!

மேலும் இந்த படத்தில் அசரீதியாக ஒலிக்கும் விஜய் சேதுபதி குரல் படத்திற்கு இன்னும் மெருகூட்டுகிறது என்று சொல்லலாம். பரத் ஷங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சூப்பராக உள்ளது. ஒரு சில லாஜிக்கல் குறை இருந்தாலும் லாஜிக்கை கவனத்தில் கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்கு படம் என்ற அளவில் பார்த்தால் ‘மாவீரன்’ நிச்சயம் ரசிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...