விஜய் படம் உள்பட 4 படங்கள் தான்.. தமிழ் படமே வேண்டாம் என தெறிச்சு ஓடிய நடிகை..!

Published:

விஜயகாந்த், விஜய், பிரசாந்த் மற்றும் அரவிந்த்சாமி என 4 நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் இனிமேல் தமிழ் வேண்டாம் என்று தெறிச்சு ஓடிய சம்பவம் தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் உருவான ’காதல் கவிதை’ என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கேரக்டரில் நடிகை இஷா கோபிகர் அறிமுகம் ஆனார். இந்த படம் முழுவதும் ஒரு கவிதை மாதிரி இருக்கும். பிரசாந்த் மற்றும் இஷா கோபிகர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அரசியலுக்கு வந்து மண்ணை கவ்விய நடிகர்கள்.. விஜய்க்கு வெற்றி கிடைக்குமா?

isha koppikar1

இதனை அடுத்து அரவிந்த்சாமி நடித்த ’என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக இஷா கோபிகர் நடித்தார். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் பின்னணி இசை அமைக்கும் போது படத்தை பார்த்து இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்க முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் இதனை அடுத்து அந்த படத்திற்கு வேறு ஒருவர் பின்னணி இசை அமைத்ததாகவும் கூறப்பட்டது.

இரண்டு படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் அடுத்ததாக அவர் விஜய் நடித்த ‘நெஞ்சினிலே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

isha koppikar5

இதனை அடுத்து விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். திருப்பதி சாமி என்ற இயக்குனர் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் கார் விபத்தில் காலமானதை அடுத்து அந்த படத்தை அவருடைய உதவியாளர் ஒருவர் தான் முடித்ததாக கூறப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தாலும் இந்த படமும் வழக்கம் போல் தோல்வி அடைந்தது.

கே பாலசந்தரின் கண்டுபிடிப்பு.. பிஎச்டி டாக்டர் பட்டம்.. நடிகர் சார்லியின் அரியப்படாத தகவல்..!

நான்கு படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததை அடுத்து இஷா கோபிகருக்கு வாய்ப்புகள் குறைவாக கிடைத்தது. ஒரு சில படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்து விட்டு மீண்டும் பாலிவுட் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

nenjinile

தமிழில் வரிசையாக நான்கு தோல்வி படங்கள் கொடுத்தாலும் ஹிந்தியில் அவர் பல வெற்றி படங்களை கொடுத்தார். 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் அவர் பல படங்களில் ஹிந்தியில் நடித்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு ரீஎண்ட்ரியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி அளித்த இஷா கோபிகர் ஒரு முன்னணி நடிகர் ஒருவர் தவறான நோக்கங்களுடன் அணுகியதாகவும், தான் மறுத்து விட்டதால் என்னுடைய பட வாய்ப்புகளை அவர் கெடுத்ததாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

ayalaan isha

அதேபோல் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் வந்து பிரபல நடிகரின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டால் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாகவும்,  ஆனால் தான் முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் தமிழ் திரையுலகைத்தான் கூறியுள்ளார் என்று கூறப்படுவதுண்டு. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!

நான்கே படங்கள் நடித்துவிட்டு அவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்றதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம் என்று கூறப்படுவதுண்டு.  ஆனால் அதே நேரத்தில் ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு தகுந்த மரியாதையை படக்குழுவினர் அளித்ததாகவும் அதை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...