விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடகராக அறிமுகமாகும் அஜித்!

அக்கால சினிமா முதல் இக்கால சினிமா வரை பாடல்களுக்கு ஏற்ப நடனமும், நடனத்திற்க்குகேற்ற பாடலும் மிக முக்கியமான ஒன்றாகும். பாடலுக்காக திரையில் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. அந்த அளவிற்கு பாடல்கள் திரைப் படத்திற்கு ஒரு தூணாக அமைந்துள்ளது.

இன்றைய சினிமாவில் பல முன்னணி பாடகர்கள் இருந்து வரும் நிலையிலும் பல ஹீரோக்கள் பாடகர்களாக களமிறங்கி கலக்கி வருகின்றனர்.  முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் நா ரெடி பாடலை நடிகர் விஜய் தான் பாடியுள்ளார். மேலும் விஜய் பொதுவாக அவர் நடிக்கும் படங்களில் அவர் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் விஜய் பாடல் என்றாலே பட்டி தொட்டி எல்லாம் கலக்கி வரும் அளவிற்கு பிரபலமடைந்து விடும்.

இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, கார்த்தி,விக்ரம் என பல நடிகர்கள் தனது படங்களின் மூலம் தனது சொந்த குரலில் பாடல் பாடும் ஆசையை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் இதுவரை எந்த பாடலும் படவில்லை. அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் இசையமைத்த ஜிப்ரானிடம் ஒரு பேட்டியில் அஜித்தை வைத்து துணிவு படத்தில் பாடல் பட வைக்க முயற்சி செய்தீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது.

ஜவான் படத்தில் அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தாறுமாறான வளர்ச்சி தான்..

அதற்கு பதிலளித்த ஜிப்ரான், பாடல் பட வைப்பதற்கு பதிலாக பாடலின் இடையில் பேச வைக்க ஆசை பட்டதாக கூறினார். துணிவு படத்தின் ஜங்ஸ்டா பாடலின் இடையில் வரும் ரப் பாடலில் அவரை பேச வைப்பதற்கு முயற்சி செய்ததாக கூறினார்.

ஆனால் பாடல் தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு நேரம் போதுமானதாக இருந்ததால் அதை தொடர்ந்து நோ கேட்ஸ் என்ற வசனத்தை பாடலில் பயன்படுத்தியதாக கூறினார்.

இந்நிலையில் அனிருத் இசையில் பல நடிகர்கள் பாடிவிட்டனர், அஜித்தை வைத்து விட முயற்சி படத்திற்காக ஒரு பாடலை பாட வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்களை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த பாடல் அமையும் என எதிர்பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews