ஆரம்ப விமர்சனம் இவ்ளோ முக்கியமா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிராஜக்ட் கே…! ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

சில படங்கள் படம் உருவாவதற்கு முன்பே அதைப் பற்றிய செய்திகளுடன் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி விடும். சில படங்கள் படம் திரைக்கு வரும் வரையில் ஒவ்வொரு செய்தியாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

இது எதற்காக என்றால் படத்தின் கணிசமான வசூல் வேட்டைக்குத் தான் என்பது தெரிய வரும். அந்த வகையில் தற்போது வேட்டைக்குக் காத்திருக்கும் படம் தான் பிராஜக்ட் கே.

Project Kamal
Project Kamal

படத்தைப் பற்றிய சூடான தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களின் வாயிலாக வெளிவந்து கொண்டே உள்ளன. இதைப் பார்க்கும் ரசிகர்கள் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என்று தேடிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

டீசர், பர்ஸ்ட் லுக், போஸ்டர், டிரெய்லர் என ஒவ்வொன்றாக நமக்கு படம் வரும் வரை படக்குழு தந்து கொண்டே இருக்கிறது. இதில் காட்டப்படும் காட்சிகள் நமக்கு த்ரில்லான ஒரு அனுபவத்தைத் தருகின்றன. இனி லேட்டஸ்டாக வந்து கொண்டு இருக்கும் பிராஜெக்ட் கே படத்தைப் பற்றிய அப்டேட்களைப் பார்க்கலாமா…

Project K 1
Project K

பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கமல், அமிதாப்பச்சன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்று சேர உள்ளது. கமல் தான் படத்தின் பிரதான வில்லன். படத்தில் தீபிகா படுகோனே தான் ஹீரோயின்.

ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை வாரி வாரி வழங்க இருக்கிறார். இவர் பிரபாஸ் உடன் காதல் வயப்படும் காட்சிகள் ரசிகர்களுக்கு தனி கிக்கை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் பட்ஜெட் ஏற்கனவே உயர்ந்து விட்டது. மேலும் பலமான பார்வையாளர்களை தக்கவைக்க ஆரம்ப விமர்சனங்கள் மிகவும் சாதகமாக இருக்க வேண்டும். ஏனெனில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறுவதற்கு இது முக்கியமானதாக இருக்கும். பிரபாஸின் சமீபத்தில் வெளியான சலார் (2023) படத்தின் டிரெய்லர் ஏற்கனவே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இது கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் தோல்வியில் இருந்து மீளச் செய்து ஒருவித புத்துணர்ச்சியை ஊட்டும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் விரைவில் வெளியாக உள்ள பிரபாஸின் சலார் வெற்றி பெற்றால், படத்தின் ஓப்பனிங் வார இறுதி வசூல் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.