ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!

Published:

பொதுவாக ரீமேக் திரைப்படங்கள் என்றால் மொழிக்கு தகுந்தவாறு சில மாற்றங்கள் செய்வார்கள் என்பதும் சில இயக்குனர்கள் கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட படமாக இயக்குவார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் கன்னடத்தில் உருவான ‘சங்கர் குரு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை ஒரு காட்சியை கூட மாற்றாமல் கிட்டத்தட்ட அப்படியே தமிழில் ரீமேக் செய்தார்கள். அந்த திரைப்படம் தான் சிவாஜி கணேசன் நடித்த ‘திரிசூலம்’.

51 வயது முன்னாள் முதலமைச்சரை திருமணம் செய்து கொண்ட 24 வயது தமிழ் நடிகை..!

thirisoolam1

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஒரு நாள் பிரபல கதை ஆசிரியர் உதய் சங்கர் என்பவரை அழைத்து சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன் போல் தனக்கு ஒரு படம் வேண்டும் என்றும் கதை தயார் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

இதனை அடுத்து அவர் தெய்வமகன் பார்த்து அதன்பின் எழுதிய கதை தான் ‘சங்கர் குரு’. இந்த படத்தில் கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் திடீரென சந்தர்ப்பவசத்தால் பிரிய நேரிடும். அப்போது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க ஒரு குழந்தை  அம்மாவிடமும், இன்னொரு குழந்தை வேறொரு இடத்தில் வளர வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த வகையில் அப்பா ஒரு இடத்தில், அம்மாவும் ஒரு குழந்தையும் ஒரு இடத்தில், இன்னொரு குழந்தை இன்னொரு இடத்தில் என தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் அனைவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. ராஜ்குமார் இந்த படத்தில் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படத்தை சோம சேகர் என்பவர் இயக்கியிருந்தார்.

thirisoolam3 1

இந்த படம் மிகப்பெரிய அளவில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுக்கொண்டார். அதன் பிறகு  திரிசூலம் என்ற பெயரில் தமிழில் தயாராகியது.  சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா, எம்.என்.நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை கே.விஜயன் இயக்கியிருந்தார்.

ஐந்தே படங்கள்.. கே பாலசந்தர் – இளையராஜா இணைந்த கடைசி படம்.. ஈகோவால் பிரிவா?

சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் 1979ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி வெளியானது. இந்த படம் சிவாஜி கணேசனின் 200வது படம் என்ற பெருமையையும் பெற்றது. மேலும் இந்த படத்தின் பல காட்சிகள் சிவாஜியின் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

thirisoolam2

இந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் இந்த படம் வெளியாகி 200 நாட்களுக்கும் அதிகமாக ஓடியது.

சூப்பர் ஹிட்டான இந்த படத்தை ரீமேக் செய்த கே.விஜயன் கன்னடத்தில் இருந்த காட்சிகளை அப்படியே தமிழில் இயக்கியிருப்பார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் ராஜ்குமார் சைக்கிளில் வருவது போல் இருந்ததை சிவாஜி கணேசன் ஸ்கூட்டரில் வருவது போல் மாற்றம் செய்து இருந்தார். அதனை அடுத்து ‘இரண்டு கைகள் நான்கானால்’ என்ற பாடலில் இரண்டு சிவாஜிகள் ஒன்று சேரும் காட்சிகள் உட்பட அனைத்து காட்சிகளையும் அப்படியே இயக்கி இருந்ததாக கூறப்பட்டது.

பொறுத்தது போதும் பொங்கி எழு.. வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் நடிகை கண்ணாம்பா!

ஒரு சில காட்சிகளை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருந்தாலும் ‘திரிசூலம்’ படம் கன்னடத்தில் வெற்றி பெற்றதை விட மிகப்பெரிய வெற்றி தமிழில் பெற்றது. அதற்கு காரணம் கன்னடத்தில் ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும் மூன்று வேடங்களில் மிகப்பெரிய வித்தியாசத்தை காண்பித்து இருக்க மாட்டார். ஆனால் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் தன்னுடைய வித்தியாசத்தை காண்பித்தார் என்பதும் பாடி லாங்குவேஜ் உள்பட பல விதங்களில் அவர் கேரக்டர்களை வேறுபடுத்தி காட்டினார் என்பதும் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

மேலும் உங்களுக்காக...