51 வயது முன்னாள் முதலமைச்சரை திருமணம் செய்து கொண்ட 24 வயது தமிழ் நடிகை..!

Published:

தமிழ் மற்றும் கன்னடத் திரை உலகில் பல படங்கள் நடித்த நடிகை ஒருவர் 51 வயது முன்னாள் முதலமைச்சரை 24 வயதாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டது அரசியல் மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நடிகை குட்டி ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குட்டி ராதிகா சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கன்னட திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தார்.

பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!

kutty radhika

தொடர்ச்சியாக கன்னட படங்கள் நடித்துக் கொண்டிருந்த குட்டி ராதிகாவுக்கு ‘இயற்கை’ என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படம் முழுக்க முழுக்க கப்பல் மற்றும் கடல் சார்ந்த இடங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஷாம் ஹீரோவாக நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் குட்டி ராதிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவாக பேசப்பட்டது. இதன் பிறகு அவர் ஸ்ரீகாந்த் நடித்த வர்ணஜாலம், ரமணா நடித்த மீசை மாதவன், விக்னேஷ் நடித்த உள்ளக்காதல் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

kutty radhika1

இந்த நிலையில் நடிகை குட்டி ராதிகா கடந்த 2000-ஆம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரத்தன் குமார் கடந்த 2002ஆம் ஆண்டு காலமானதை அடுத்து திடீரென 2010ஆம் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இருவருக்கும் 2006ஆம் ஆண்டே திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

தமிழில் ஒருசில படங்கள் தான்.. அதன்பின் தமிழக அமைச்சரின் மருமகள் ஆன நடிகை..!

குமாரசாமிக்கு ஏற்கனவே அனிதா என்பவர் உடன் திருமணம் நடந்திருந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதனை அடுத்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட குமாரசாமிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

kutty radhika3

திருமணத்திற்கு பின்னரும் குட்டி ராதிகா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது கூட அவர் பைரவி தேவி உள்பட இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவை விரைவில் ரிலீஸாக உள்ளது.

நாகேஷ் படத்தில் நடித்தவர்… பின்னாளில் சுகாதாரத்துறை அமைச்சரின் மனைவியான நடிகை..!

கர்நாடகா முதல்வராக 2006 முதல் 2007 வரையிலும் 2018 முதல் 2019 வரையிலும் குமாரசாமி இருந்தார். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 224 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...