100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!

Published:

80,90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சித்தாரா. இவர் இயக்குனர் கே பாலச்சந்தர் ஆல் 1989 ஆம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் முதல் படத்தை தொடர்ந்து புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதூர், ஒரு வீடு இரு வாசல், பாட்டொன்று கேட்டேன், படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குடும்பப்பாங்கான கதைக்களத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.

அவ்வப்போது ஒரு சில படங்களிலும் தலைக்காட்டி வருவதையும் வழக்கமாக வைத்துள்ள இவர் சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, கௌரிமார்கள், பராசக்தி உட்பட சில சீரியல்களை நடித்தார்.

சூப்பர் ஸ்டார் டைட்டில் – விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை!

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார். இவரது சமீபத்திய தெலுங்கு வெற்றிப்படங்களில் ஸ்ரீமந்துடு, சங்கராபரணம், பாலே பலே மகாடுவியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

50 வயதை கடந்தும் நடிகை சித்தாரா ஏன் திருமணம் செய்ய வில்லை என கேள்வி எழுந்தது. அதற்கு ஒருவரை காதலித்த நிலையில் அந்த காதல் கை கூடாத காரணத்தால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...