ஐந்தே படங்கள்.. கே.பாலசந்தர் – இளையராஜா இணைந்த கடைசி படம்.. ஈகோவால் பிரிவா?

கடந்த 80களில் தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர்களின் அனைத்து படங்களுக்கும் இசைஞானி இளையராஜாதான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், மணிரத்னம் ஆகிய இயக்குனர்கள் இளையராஜா இசையில்தான் படம் எடுத்தார்கள். ஆனால் அனைத்து இயக்குனர்களும் ஒரு கட்டத்தில் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு இசை அமைப்பாளர்களை தேடிச் சென்றனர்.

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் குமார் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் படங்களை இயக்கிக் கொண்டிருந்த கே.பாலச்சந்தர், இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து ஐந்து படங்கள் மட்டுமே பணியாற்றினார். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு இசையமைப்பாளர்களுக்கு மாறிவிட்டார்.

பொறுத்தது போதும் பொங்கி எழு.. வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் நடிகை கண்ணாம்பா!

ilayaraja k balachander3

கே.பாலச்சந்தரின் ஆரம்பகால படங்களில் வி.குமார் என்பவர் தான் இசையமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் பொருத்தமான இசையமைப்பாளராக குமார் இருந்தார் என்று கூறப்படுவது உண்டு.

அதன் பிறகு எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலச்சந்தர் படங்களில் இசையமைக்க வந்த பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர். அந்த படங்களின் அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியது. குறிப்பாக நினைத்தாலே இனிக்கும் படத்தில் 14 பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் கம்போஸ் செய்திருந்தார். அவை அனைத்துமே சூப்பர் ஹிட்டானது.

ilayaraja k balachander4

இந்த நிலையில்தான் பல நெருக்கமான நண்பர்கள் கே.பாலசந்தரிடம் இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரியுங்கள் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து முதன் முதலாக சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள்.

இசை, சங்கீதம் குறித்த கதை கொண்ட இந்த படத்தில் இளையராஜா இசையமைத்தால் சரியாக இருக்கும் என்று பாலச்சந்தர் நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. ‘பாடறியேன் படிப்பறிவேன்’, ‘நானொரு சிந்து’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘பூ மாலை வாங்கி வந்தேன்’ உட்பட ஒன்பது பாடல்களும் ஜேசுதாஸ் மற்றும் சித்ரா ஆகிய இருவர் மட்டுமே பாடினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சிறந்த பாடகிக்கான தேசிய விருது சித்ராவுக்கு கிடைத்தது.

நாகேஷ் படத்தில் நடித்தவர்… பின்னாளில் சுகாதாரத்துறை அமைச்சரின் மனைவியான நடிகை..!

ilayaraja k balachander1

இதனையடுத்து பாலச்சந்தர் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் ‘புன்னகை மன்னன்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘உன்னால் முடியும் தம்பி’ மற்றும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தனர். புன்னகை மன்னன் திரைப்படத்தில் முதல் முதலாக மேற்கத்திய இசையை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அவை இசை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

அதேபோல் மனதில் உறுதி வேண்டும் படத்திலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் தான் ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தில் இருவரும் பணிபுரிந்தபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த படத்தில் இசை சம்பந்தமான வசனங்கள் வரும்போது சில வசனங்களை மாற்ற வேண்டும் என்றும், சில வசனங்களை புகுத்த வேண்டும் என்றும் இளையராஜா வற்புறுத்தியதாகவும் இதனால் பாலச்சந்தருக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இருவரும் மீண்டும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தில் இணைந்தனர். கருத்து வேறுபாடு இருவருக்கும் உச்சத்தில் இருந்தாலும் இந்த படத்திலும் கே.பாலச்சந்தருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்தார். அத்துடன் இருவரும் இணைந்து கடைசி வரை பணிபுரியவில்லை.

ilayaraja k balachander2

‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு பிறகு பாலச்சந்தர் இயக்கிய படங்களில் மரகதமணி சில படங்களுக்கு இசையமைத்தார். அதன் பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மானை தன்னுடைய தயாரிப்பில் உருவான ரோஜா படத்தில் அறிமுகம் செய்த பாலச்சந்தர், தான் இயக்கிய ‘டூயட்’, ‘பார்த்தாலே பரவசம்’ ஆகிய படங்களில் அவரை பயன்படுத்திக் கொண்டார். டூயட் படத்திற்கு பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே பாலச்சந்தர் இயக்கினார் என்பதால் அதன் பிறகு மீண்டும் இளையராஜா – பாலச்சந்தர் கூட்டணி கடைசி வரை இணையவில்லை.

இந்த படத்துல நடிச்சது சிவாஜியே இல்லை.. ஆஸ்கர் நிர்வாகிகள் நம்ப மறுத்த ‘தெய்வ மகன்’ திரைப்படம்..!

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு காரணம் ஈகோ தான் என்று திரை உலகின் சிலர் கூறினாலும் உண்மையான காரணம் என்ன என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...