விஜய் அந்த கதையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை..! பல நாள் உண்மையை உடைத்த இயக்குனர்..!

By Staff

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்பொழுது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டு வருகிறது. மேலும் இது பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. நாளுக்கு நாள் இதன் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து வருகிறது.

மேலும் இப்படம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இன்று மிகப்பெரிய ஆக்க்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் இவருக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம். ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே மாற்றியதற்கு ஒரு சில படங்கள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

Vijay

அதில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி என்னும் திரைப்படம். படத்தின் மூலம் மிகப்பெரிய பெண் ரசிகைகளை சேகரித்தார். இயக்குனர் பேரரசு குடும்பக் கதை களத்தில் மசாலா சேர்த்து எடுக்கக் கூடியவர். இவரது படங்கள் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும்.

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் தலா இரு படங்கள் நடித்திருப்பார். அந்த இரு படங்களும் குடும்ப உறவுகளை சார்ந்து இருக்கும். சிவகாசி திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட், திருப்பாச்சி படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் கொண்டு படம் இருக்கும். தமிழ்நாட்டில் அம்மா சென்டிமென்டில் வரும் படங்கள் ஹிட் அடிக்க தவறியதில்லை. அதேபோல சிவகாசி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதேபோல தங்கச்சி சென்டிமென்டில் உருவான திருப்பாச்சி படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்ததாக இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

Perarasu

மேலும் இது பற்றி இவர் கூறியதாவது “முதலில் இந்த கதையை நான் யாரையும் நினைத்து எழுதவில்லை. தங்கச்சி சென்டிமென்ட் மையமாகக் கொண்டு ஒரு கதை களத்தை உருவாக்கினேன். கதை களத்திற்குள் வந்து உயிர் கொடுத்தது விஜய் தான்” என்று கூறியுள்ளார். ”வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் இந்த படத்தை இவ்வளவு சிறப்பாக வந்திருக்க முடியாது. இந்தப் படத்தின் வெற்றிக்கும் மக்களிடம் சென்று அடைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தவர் விஜய் தான்” என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பயணம் குறித்து ஒரு பார்வை!

மேலும் உங்களுக்காக...