தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப் போகுது மழை!

Published:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போழுது சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் ராயபுரத்தில் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சென்னை அண்ணாநகரில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதை தொடர்ந்து சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. தரமணி, ஆலந்தூரில் தலா 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் செய்யும் தவறால் சரிவின் விழும்பில் இருக்கும் பூமி! அதிர்ச்சி அப்டேட்!

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் அதனை ஒட்டிய குமரி கடல், ஆந்திர கடலோரம், இலங்கை கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய மத்திய வங்க கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரத்திலும் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் உங்களுக்காக...