2000 ரூபாய் நோட்டு இருக்கிறதா? எங்களிடம் கொடுங்கள்: அமேசான் அறிவிப்பு..!

Published:

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் இருந்தால் அமேசான் நிறுவனத்தில் பொருள் வாங்கி மாற்றி கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் 2000 ரூபாய் நோட்டு என்பது இல்லை என்ற நிலையில் தற்போது பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு சிக்கி இருக்கிறது

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது

அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு கேஷ் ஆன் டெலிவரி என்ற சேவையின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை அமேசான் டெலிவரி பிரதிநிதிகள் இடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் கேஒய்சி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி சேவையின் மூலம் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி பலன் தரலாம் என்றும் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்கள் கொண்டு வந்து கொடுக்கும்போது 2000 ரூபாய் நோட்டுகளை அவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வங்கிகள் உள்பட பல்வேறு இடங்களில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் இருப்பவர்கள் அமேசான் தளத்தில் பொருள்களை வாங்கி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...