அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்

Published:

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசும், நீதிக்கட்சியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. காமராசர் ஆட்சிக் காலத்தில் அப்போது திராவிடர் கழகத்தினை வழிநடத்தி வந்த தந்தை பெரியாரிடமிருந்து விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. திமுகவின் முக்கிய தலைவர்களாக அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இருந்தனர்.

அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அமைச்சர்களின் பட்டியல் தயாரானபோது அதில் எம்.ஜி.ஆர் பெயரும் இருந்தது. ஆனால் எம் ஜி ஆரோ அந்த பட்டியலில் இருந்து எனது பெயரை எடுத்து விடுங்கள் எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. வேண்டாம் என்றார். ஒரு கனம் அறிஞர் அண்ணா அதிர்ந்து போனார். மேலும் எம்.ஜி.ஆரே இதற்கான காரணம் சொன்னார்.

இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!

நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம்பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு.. அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அந்த பதவியே கொடுங்கள் என்றார். அப்போது உடன் இருந்தவர்கள் அண்ணா கொடுத்த பதவியை மறுப்பது. அண்ணாவை மதிக்காதுப்போல் ஆகும் என்று கட்சியில் என்று குறை கூறினார்கள். அப்போது இதனை அறிந்த அண்ணா அவர்கள் தந்த விளக்கம்.

எத்தனையோ பேர்கள் பதவிக்காக போட்டி போடுவார்கள் பதவி தரவில்லை என்பதற்காக கட்சி தாவுவார்கள். .பதவிக்காக பகையாளியாக மாறுபவர்கள் உண்டு ஏன் பதவிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவர்கள் உண்டு. .இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில். பதவி வேண்டாம் என்று உதறி தள்ளும் எம்ஜிஆர் பெருதன்மைய காட்டுகிறது. அவரால் பெற்ற ஆட்சி இது அதற்காக தனது கொள்கையே தர்மம் செய்து உள்ளார். கட்சிக்காக தனது உழைப்பை தர்மம் செய்து உள்ளார். கட்சியில் உழைத்தவர்களுக்காக தனது பதவியை தர்மம் செய்து உள்ளார். இப்படியும் தர்மம் செய்யலாம் என்பதை கற்றுத் தந்துள்ளார்.

தம்பி ராமச்சந்திரன் மக்கள் மனதில் மகா ராஜா..திரையுலகுக்கு சக்கரவர்த்தி…அதனால் மந்திரி பதவி அவருக்கு பெரிய விஷயமல்ல. தம்பி எப்போதும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இருக்கட்டும்“ என்றார் அண்ணா.

மேலும் உங்களுக்காக...