நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர்ஸ்டாருடன் நடித்த செந்தில்… காமெடியில் களைகட்டுமா லால்சலாம்..?

Published:

மனிதன், எஜமான், வீரா, முத்து, படையப்பா, பாபா, அருணாச்சலம் போன்ற பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விஷ்ணுவிஷால், விக்ராந்த், விக்னேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். லால் சலாம் படத்தில் நடித்தது பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

லால்சலாம் நல்ல அருமையான கதை. அதுல ஒரு பூசாரி. அவரு புள்ளை வந்து பட்டணத்துக்குப் போயிருக்கும். அதுக்கு ரெண்டு பேரன்கள். அது ஒரு அருமையான கதை. இந்தப் படம் கண்டிப்பா வெற்றி பெறும். ரஜினிகாந்த் எப்பவும் ஒரே மாதிரியா தான் இருப்பாரு. ஆரம்பத்துல இருந்த மாதிரி தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. படம் ஜெயிக்கும்போதும், தோற்கும்போதும் ஒரே மாதிரி தான் இருப்பாரு.

முக்கால்வாசி அவரோட படத்துல என்னன்னா பாட்டுகள் நல்லா அமைஞ்சிரும். சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடின்னு… குத்தாட்டம்தான் சூப்பரா இருக்கும். அப்படி ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரி ஒரு பாட்டு கொடுத்துருவாரு.

டெல்லில ஒரு பெரிய ஓட்டல். ஒரு ஊரே தங்கலாம். அங்க போயி தோட்டத்துல பாத்திக்கட்டி வச்சிருக்கேன் வச்சிருக்கேன்னு ஒரு பாடல். புலியூர் சரோஜா தான் டான்ஸ் மாஸ்டர்.

Rajni, senthil
Rajni, senthil

ரஜினிகாந்தே கால்ஷீட் கொடுக்குறேன்னு சொன்னாரு. என்னை வச்சி ஒரு படம் தயாரிக்கிறீங்களான்னு கேட்டாரு. நான் தான் இல்ல சார்…. வேண்டாம்னுட்டேன். ரெண்டு மனசா இருந்தது. நான் நினைச்சிருந்தா அந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கலாம். ஆனா நான் நினைக்கல.

பணக்காரனா ஆயிடலாம்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும்ல. நமக்கு அது கிடையாது. கோடி கோடியா பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படக்கூடாது.

யாரும் யாரையும் ஏமாற்றக்கூடாது. ஆனா உழைப்பு வேணும். நல்ல அடக்கமா இருந்து பேரும் புகழும் சம்பாதிக்கணும். நான் ஏகப்பட்டதை ஏமாந்துருக்கேன். ஆனா வெளியே சொல்லல. என் ஊரு மட்டும் தெற்கே பிறந்தாலும் எனக்கு மெட்ராஸ் தான் சொந்த ஊரு மாதிரி ஆயிட்டு. 13 வயசுலயே இங்கே வந்துட்டேன்.

Lalsalam
Lalsalam

ஆனா ஊருக்குக் குலதெய்வம் கோவிலுக்கு எல்லாம் போவேன். கல்யாணம் அது இதுன்னு எல்லாத்துக்கும் போவேன். வருவேன். 5வது படிச்சதே பெரிய விஷயம். அப்பவே பள்ளிக்கூடத்துல நாடகங்கள்லாம் நடிச்சிருக்கேன். அப்படி இப்படி வாழ்க்கை ஓடி கடைசில சினிமாவுல வந்துட்டேன். மனிதன் மனிதனா இருக்கணும். அதுக்கு மேல போனா ஆண்டவன் அடக்கிருவாரு.

 

 

மேலும் உங்களுக்காக...