பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

Published:

சிவாஜி கணேசன் நடித்த படத்தை தயாரித்து, இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் ஸ்ரீதர், பொருளாதார பிரச்சினை காரணமாக அந்த படத்தை நிறுத்தியதாகவும், அதன் பின்னர் எம்ஜிஆர் நடித்த படத்தை தயாரித்து இயக்கி அந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து சிவாஜி படத்தை முடித்ததாகவும் கூறப்படுகிறது.

சிவாஜி கணேசன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வைர நெஞ்சம்’. சிவாஜி கணேசன், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சிஐடி சகுந்தலா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

vaira nenjam

இந்த படத்தை ஸ்ரீதர் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஆனால் ஹிந்தியில் இந்த படம் சீக்கிரமே முடிவடைந்து வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில்தான் ‘வைர நெஞ்சம்’ படத்தை முடிக்க முடியாத அளவுக்கு ஸ்ரீதருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த படம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ஸ்ரீதரின் இக்கட்டான நிலையை அறிந்த எம்ஜிஆர் அவரை அழைத்து உங்களுக்கு நான் ஒரு படம் பண்ணி தருகிறேன் என்று வலிய வந்து உதவி செய்தார். அப்படி உருவான படம்தான் ‘உரிமைக்குரல்’.

urimaikural1

இரண்டு அன்பான அண்ணன் தம்பிகள் எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்ஜிஆர் இருவரும் பாசத்துடன் இருப்பவர்கள். அந்த ஊரைச் சேர்ந்த லதா, எம்ஜிஆரை காதலிப்பார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து அந்த ஊர் பண்ணையார் நம்பியாரிடம் கடன் வாங்குவார்கள்.

எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!

இந்த நிலையில் நம்பியார், லதாவை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது எம்ஜிஆர் லதாவை அழைத்துச் சென்று ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பியார் வாங்கிய கடனை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டை ஏலத்திற்கு கொண்டு வருவேன் என மிரட்டுவார். அதன் பிறகு எங்கெங்கோ பணத்தை புரட்டி எம்ஜிஆர் தனது வீட்டை மீட்பார்.

urimaikural12

அந்த நேரத்தில் திடீரென பண்ணையார் நம்பியார், லதாவை கடத்திக்கொண்டு செல்ல, அவரை எம்.ஜி.ஆர் விரட்டிச் சென்று லதாவை மீட்டு தனது வீட்டையும் மீட்டு தனது அன்பான குடும்பத்துடன் இணைந்து வாழ்வார் என்பது தான் இந்த படத்தின் கதை.

இந்த படம் 1974ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் இன்றும் அனைவர் மனதிலும் நிற்கும். ‘கல்யாண வளையோசை’, ‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு’, ‘விழியே கதை எழுது’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதது.

vaira nenjam1

எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்துதான் ‘வைர நெஞ்சம்’ படத்தை ஸ்ரீதர் முடித்தார். ஆனால் ஹிந்தியில் வெளியாகி தோல்வி அடைந்தது போலவே தமிழிலும் இந்த படம் தோல்வி அடைந்தது.

மேலும் உங்களுக்காக...