பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தான் எழுதிய நாவல் ஒன்றை திரைப்படமாக இயக்கி, அந்த படத்தை ஏவிஎம் மெய்யப்பன் செட்டியாரிடம் போட்டு காட்டினார். அந்த படத்தின் கதை மற்றும் சமூக கருத்து ஆகியவற்றை புரிந்து கொண்ட மெய்யப்ப செட்டியார், ‘இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம், இந்த படத்தின் ரிலீஸ் உரிமை எவ்வளவோ, அதை நான் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன், நான் வேறு ஒரு பிரபல நடிகரை வைத்து இதே கதையை மீண்டும் படமாக எடுக்க அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டார்.
ஆனால் ஜெயகாந்தன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தன்னுடைய படைப்பை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவமதிப்பதாகவே கருதினார். இதனை அடுத்து தானே அந்த படத்தை ரிலீஸ் செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அந்த படம் தான் ‘உன்னைப்போல் ஒருவன்’.
இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!
எழுத்தாளரான ஜெயகாந்தன் எழுத்து துறையில் மட்டுமின்றி சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உங்களுடைய எந்த நாவலை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து படமாக்க முடிவு செய்தால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறியது.
இதனை அடுத்து ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற நாவலை அதே பெயரில் அவர் படமாக்க விரும்பினார். ஸ்கிரிப்ட் எழுதி வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கொண்டு போய் காண்பித்தபோது அவர்கள், ‘இது ஆர்ட் படம் போல இருக்கிறது, இதை படமாக எடுத்தால் கண்டிப்பாக தோல்வி அடையும்’ என்று கூறினர்.
இதனால் மன வருத்தம் அடைந்த ஜெயகாந்தன் தானே அந்த படத்தை தயாரித்து, இயக்க முடிவு செய்தார். தன்னிடம் உள்ள சேமிப்பு மற்றும் தனது நண்பர்களிடம் வாங்கிய கடன் ஆகியவற்றை கொண்டு ‘உன்னைப்போல் ஒருவன்’ தயாரானது.
பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..
உதயகுமார் மற்றும் காந்திமதி முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்திற்கு வீணை சிட்டிபாபு இசையமைத்திருந்தார். இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை என்பதால் வாங்க மறுத்தனர். இந்த படத்தை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், ‘இந்த படத்தை நானே வாங்கிக் கொள்கிறேன், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம், இந்த படத்தின் ரிலீஸ் உரிமைக்காக உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன், ஆனால் இந்த படத்தை நான் வேறு ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து மீண்டும் தயாரித்துக் கொள்கிறேன், அதற்கு அனுமதி மட்டும் கொடுங்கள்’ என்று கேட்டார்.
தயாரிப்பு செலவைவிட கூடுதலாக பணம் கிடைக்கும் என்று தெரிந்தும் ஜெயகாந்தன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தன்னுடைய படைப்புத்திறனுக்கு கிடைத்த அவமரியாதையாகவே அவர் கருதினார். இதனை அடுத்து அவரே சொந்தமாக ரிலீஸ் செய்தார்.
இந்தப் படம் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ரிலீஸ்க்கு முன்னரே தேசிய விருது கிடைத்தது என்றாலும் இந்த படம் மெதுவாக உள்ளது என்றும் பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லை என்றும் பொழுதுபோக்கு அம்சம் சுத்தமாக இல்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த படம் தோல்வி அடைந்தது. படத்திற்காக செலவு செய்த காசை திரும்ப எடுப்பதற்கு ஜெயகாந்தன் மிகவும் கஷ்டப்பட்டார்.
எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இந்த படத்தை எம்ஜிஆர் அல்லது சிவாஜி ஆகிய இருவரில் ஒருவரை வைத்து மீண்டும் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஜெயகாந்தன் மட்டும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மீண்டும் உருவாகி இருக்கும். ஆனால் ஜெயகாந்தன் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தார். இந்த படத்தின் பிரதி கூட இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தை தேடி எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.