எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் திடீரென திருமணம் செய்து கொண்டு சிஏ படித்து ஆடிட்டர் ஆகி லட்சக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் ஒன்று நடிகையின் வாழ்க்கை நடந்தது. அந்த நடிகை எல் விஜயலட்சுமி.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பெரும்பாலான நடிகைகள் கடைசி வரை நடிகையாக இருப்பார்கள் என்பதும் கதாநாயகி, அம்மா, அக்கா, அண்ணி, பாட்டி போன்ற கேரக்டர்களில் நடிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி உட்பட  பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த நடிகை எல் விஜயலட்சுமி திருமணத்திற்கு பின்னால் தனது பாதையை மாற்றிக்கொண்டு கல்வியில் ஆர்வம் காட்டி சிஏ ஆடிட்டர் ஆகி அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

l vijayalakshmi3

கேரளாவை சேர்ந்த எர்ணாகுளம் என்ற பகுதியில் பிறந்த விஜயலட்சுமி தனது குடும்பத்துடன் சிறுவயதில் திருநெல்வேலிக்கு வந்தார். அதன் பிறகு அவரது தந்தைக்கு வேலை மாற்றலான காரணத்தால் புனேவுக்கு சென்ற நிலையில் சில ஆண்டுகளில் சென்னை வந்தனர்.

சிறுவயதிலேயே வைஜெயந்திமாலா, பத்மினி, லலிதா போன்றவர்களின் நாட்டியத்தை பார்த்து ஆர்வம் கொண்ட விஜயலட்சுமி நடனத்தின் மீது ஆர்வம் கொண்டார். அவரது ஆர்வத்தை பார்த்த விஜயலட்சுமியின் தந்தை அவரை நடனப் பள்ளியில் சேர்த்தார். 9 வயதிலேயே விஜயலட்சுமியின் முதல் அரங்கேற்றம் நடந்தது.

அபூர்வ ராகங்கள்.. சிக்கலான கதையை சிறப்பாக கையாண்ட கே.பாலச்சந்தர்!

இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள நடன கலைஞர் ஒருவரிடம் முறைப்படி நடனம் கற்றார். பரதநாட்டிய நடனத்தில் அவர் பயிற்சி பெற்ற நிலையில் தான் அவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த காலத்தில் திரையுலகில் நடிக்க நடனம் ஒரு முக்கிய தகுதியாக இருந்த நிலையில் அவர் ’மருமகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்த அவர் தமிழ் படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்தார். தமிழில் அவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்தார்.

கதாநாயகியாக மட்டுமின்றி, இரண்டாவது கதாநாயகி, ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை, தங்கை கேரக்டர் உள்பட எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனது நடிப்பு முத்திரை பதிக்கும் வகையில் அவரது நடிப்பு இருந்தது.

குறிப்பாக ’குடியிருந்த கோயில்’ என்ற திரைப்படத்தில் ’ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம்’ என்ற பாடல் எம்ஜிஆருடன் நடனம் ஆடினார். இந்த பாடல் இன்றும் பிரபலம். தமிழ் சினிமாவில் முதன் முதலாக பஞ்சாபி நடனம் இந்த படத்தில் தான் அறிமுகமானது. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதேபோல் ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் ‘கண்களும் காவடி சிந்தாகட்டும்’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.

கமல் பார்த்து பயந்த ஒரே நடிகர்.. ரஜினியுடன் நெருக்கமானவர்.. நடிப்பு ராட்சசன் ரகுவரனின் அறியாத தகவல்..!

ஜெய்சங்கரின் பல துப்பறியும் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிளாமர் நடனம், நடிப்பு என முழுக்க முழுக்க தனது கேரக்டரை மெருகேற்றுவதில் வல்லவர் எல் விஜயலட்சுமி.

l vijayalakshmi2

இந்த நிலையில் சிவாஜியுடன் ’ஊட்டி வரை உறவு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது சகோதரரின் நண்பரின் கண்ணில் பட்டதால் அவருடைய காதலுக்கு உள்ளானார். பெற்றோர்கள் முறைப்படி பேசி விஜயலட்சுமியை அவரது சகோதரரின் நண்பரான சூரஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

விஜயலட்சுமியின் கணவர் ஒரு விவசாய விஞ்ஞானி. விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தியவர். குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் வந்தபோது ஐஆர் 8 என்ற நெல் வகையை அறிமுகப்படுத்தி குறைந்த காலத்தில் இந்த நெல்லை சாகுபடி செய்யலாம் என்பதை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவி செய்தார்.

l vijayalakshmi4

இந்த நிலையில் தான் விஜயலட்சுமியின் கணவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வேலை கிடைத்த நிலையில் கணவருடன் விஜயலட்சுமி பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு அவர் தனது படிப்பை தொடர முடிவு செய்தார். முதலில் மெட்ரிகுலேஷன் படித்த அவர் அதன் பிறகு பட்டப்படிப்பு படித்து அதன் பிறகு சிஏவாக படித்தார்.

இந்த நிலையில் நான் அவரது கணவர் அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்காவில் ஆடிட்டர் ஆகி விர்ஜினியா பாலிடெக் பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியை பெற்றார். அவருக்கு லட்சக்கணக்கில் அந்த காலத்தில் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுவதுண்டு.

ஒரு சில ஆயிரங்களுக்கு தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி கல்வி மீது நாட்டம் கொண்டு ஆடிட்டராகி இலட்சக்கணக்கில் சம்பாதித்தது சக நடிகைகளை ஆச்சரியப்பட வைத்தது.

தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கும் விஜயலட்சுமிக்கு ஒரு மகன் உண்டு. அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் மென்பொருள் துறையில் உள்ளார்.

விஜய் படம் உள்பட 4 படங்கள் தான்.. தமிழ் படமே வேண்டாம் என தெறிச்சு ஓடிய நடிகை..!

தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை கவர்ந்த எல் விஜயலட்சுமி ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி ஆடிட்டர் ஆகி தற்போது அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...