முன்னணி நிறுவனங்கள் தயாரித்த முதல் கலர் படங்களின் நாயகன் எம்ஜிஆர் தான்.. ஒரு ஆச்சரிய உண்மை!

Published:

இந்தியாவின் முதல் கலர் திரைப்படம் கடந்த 1937-ம் ஆண்டில் வந்து விட்டாலும் தமிழில் கலர் படங்கள் வருவதற்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆனது. எம்ஜிஆர் நடித்த இயக்கிய நாடோடி மன்னன் பகுதி கலர் திரைப்படமாக உருவாகியிருக்கும். முதல் பாதி முழுவதும் கருப்பு வெள்ளை திரைப்படம் ஆக இருக்கும். இந்த படத்தின் இரண்டாவது பாதியில் ஐந்து நிமிடங்கள் மட்டும் கருப்பு வெள்ளை படமாகவும் அதன் பின் சரோஜாதேவி வரும் காட்சிகளிலிருந்து கலர் படமாகவும் மாறியிருக்கும்.

எம்ஜிஆர் பிக்சர் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் கலர் படம் இந்த படம் தான். இதில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. எம்ஜிஆர் பிக்சர்ஸ் மட்டுமின்றி  தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த முதல் கலர் படம் அனைத்திலும் எம்.ஜி.ஆர் தான் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.

nadodi mannan2

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் முதல் முறையாக கலர் படம் தயாரிக்க முடிவு செய்தது. அந்த படம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும். இந்த படம் கலரில் தயாரித்தால் அதிக செலவாகும் என்று கூறப்பட்டாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதற்கு முன் வந்தது. இந்த படத்தின் நாயகன் எம்ஜிஆர் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

நாடக வாழ்க்கையை தொடர்ந்து எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன தெரியுமா?

இதனை அடுத்து சரவணா பிலிம்ஸ் என்ற பிரபலமான பட நிறுவனம் தயாரித்த முதல் கலர் திரைப்படம் படகோட்டி. இந்த படத்தில் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி நடித்திருந்தனர். அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த விஜயா காம்ப்ளக்ஸ் நிறுவனம் முதல் முதலாக தயாரித்த கலர் படம் எங்க வீட்டு பிள்ளை. இந்த படத்திலும் எம்ஜிஆர் சரோஜாதேவி தான் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.

enga veettu pillai

அதேபோல் பல இயக்குனர்கள், பல நடிகர் நடிகைகளுக்கு வாழ்வு கொடுத்த மிகப்பெரிய நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனம் தயாரித்த முதல் கலர் படம் அன்பே வா. இந்த படத்திலும் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி தான் ஜோடியாக நடித்தனர். பல வெற்றி படங்களை தயாரித்த ஜெமினி நிறுவனம் தயாரித்த முதல் கலர்ப்படம் ஒளிவிளக்கு. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் தான் நாயகன்.

எம்.ஜி.ஆரை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ஆர்எம் வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் பேனர் தயாரித்த முதல் கலர் படம் ரிக்சாக்காரன். இந்த படத்திலும் எம்ஜிஆர் தான் ஹீரோ. மஞ்சுளா நாயகி ஆக நடித்திருந்தார். அதேபோல் தேவர் பிலிம்ஸ் பல கருப்பு வெள்ளை படங்களை தயாரித்த நிலையில் முதன் முதலில் தயாரித்த கலர் படம் நல்ல நேரம். இந்த படத்திலும் எம்ஜிஆர் தான் நாயகன்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

nalla neram

அந்த வகையில் தமிழ் திரை உலகில் கடந்த 60களில் பிரபலமான நிறுவனங்கள் தயாரித்த அனைத்து முதல் கலர் படங்களிலும் எம்ஜிஆர் தான் நாயகன்.  அதில் பல படங்களில் எம்ஜிஆர் ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!

இன்று சினிமா உலகில் பல டெக்னாலஜி வந்துவிட்டாலும் முதல் முதலில் கலர் படங்களை பார்த்து  ரசிகர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். திரைப்படங்களின் போஸ்டர்களில் கூட டைட்டிலின் கீழே கலர் என்ற வார்த்தை பிராக்கெட்டில் போடப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு கலர் படம் மக்கள் மத்தியில் அந்த காலத்தில் வரவேற்பு பெற்றிருந்தது.

மேலும் உங்களுக்காக...