ஷாருக்கானை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்கும் அட்லி!

Published:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இளம் இயக்குனர் அட்லி. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு என்னும் திரை பட்டாளமே நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் முதல் முறையாக இந்தியில் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வெளியான முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அட்லி ஷாருக்கானை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் அஜித்குமார்.

சமீபகாலமாக அஜித் இளம் இயக்குனர்களின் படங்களில் அதிகம் நடிப்பதை விரும்பி வருகின்றார். கடந்த ஜனவரி 11-ம் தேதி ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் வாரிசு படத்தோடும் மோதிய அஜித்தின் துணிவு படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது.

மேலும், ஹச்.வினோத் இயக்கத்தில் இதற்கு முன் அஜித் மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் மூன்றாவது முறையாக வினோத்துடன் அது துணிவுப் படத்தில் கூட்டணி அமைத்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கின்றார். இந்த படம் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது மற்றும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், அஜித் தனது அடுத்த படத்தில் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி நடிகர் அஜித் குமார் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 63-வது படத்தை நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ஏ. கே 63 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இயக்குனருடன் அஜித் இணைந்து நடிக்கும் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இது தவிர இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...