எம்ஜிஆரைப் பார்த்து இயக்குனர் கிண்டல்… அந்தப் படம் டிராப் ஆக அதுதான் காரணமா?

Published:

உரிமைக்குரல் படத்துக்கு முன்னாடி ஸ்ரீதர் உடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய படம் அன்று சிந்திய ரத்தம்.

எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதர் படம் பண்ணனும்னு நினைச்சாரு. அதற்காக அவருக்கு போன் பண்ணினாரு. எம்ஜிஆரும் எடுத்து பேசினாரு. உடனே எம்ஜிஆரை நேரில் பார்த்து கதை சொல்றாரு ஸ்ரீதர். அது அவருக்கு ரொம்பவும் பிடித்து விடுகிறது. அதில் எம்ஜிஆரின் கேரக்டரும் பிடித்து விடுகிறது. அதனால் அவர் நடிக்க சம்மதிக்கிறார். உடனே எம்ஜிஆருக்கு ஸ்ரீதர் 25 ஆயிரம் அட்வான்ஸ் கொடுக்கிறார்.

முதல் நாள் சூட்டிங் நடக்கிறது. மாணவர்கள் மத்தியில் எம்ஜிஆர் உரையாற்றுகிறார். அந்த மாணவர்கள் உண்மையாகவே படிக்கும் மாணவர்கள். அவர்கள் மத்தியில் எம்ஜிஆர் உரையாற்றியது அவருக்கு புது அனுபவமாக இருந்தது. அது எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அதனால் ஸ்ரீதரைப் பாராட்டினார். அதன்பிறகு 3 நாள்கள் தான் அந்தப் படத்துக்குப் படப்பிடிப்பு நடந்தது. அதன்பிறகு அந்தப் படம் டிராப் ஆகி விடுகிறது.

காரணம் எம்ஜிஆருக்குக் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. மாறி மாறி தள்ளிப் போய்க்கிட்டே இருக்கு. உங்க கால்ஷீட் கிடைக்காததால தான் இப்படி தள்ளிப் போய்க்கிட்டே இருக்குன்னு ஸ்ரீதர் சொல்கிறார். உடனே எம்ஜிஆர் ஒரு லிஸ்டை எடுத்து நீட்டுகிறார்.

அதில் அவரிடம் 27க்கும் அதிகமான கம்பெனிகள் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர். அதுல ஏவிஎம், வாஹிணி, ஜெமினி என பெரிய பெரிய நிறுவனங்கள் அதில் இருந்தன. அதைப் பார்த்த ஸ்ரீதர் ஆமா சார். ஜெமினி, வாஹிணி, ஏவிஎம் இவங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்படுற கம்பெனி.

Urimaikural
Urimaikural

அவங்களுக்கு எல்லாம் நீங்க ஹெல்ப் பண்ணலாம். நான் வர்ரேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அப்புறம் அந்தப் படப்பிடிப்பு நின்னு போச்சு. அதன்பிறகு எம்ஜிஆரை வைத்து உரிமைக்குரல் உள்பட பல படங்களை ஸ்ரீதர் இயக்கினார்.

ஆனால் எப்பவும் அன்று சிந்திய ரத்தம் படம் ஏன் நின்னுச்சுன்னு அவர் பேசவே இல்லை. எம்ஜிஆரும் பேசவே இல்லை. அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் ஸ்ரீதருக்கு இந்தப் படம் எதனால் நின்னுதுன்னு தெரிய வந்துச்சு.

அது வந்து சினிமா உலகில் எப்பவுமே கொளுத்திப் போடுறதுக்குன்னு ஆள்கள் இருப்பாங்க. அவங்க பண்ணின வேலை தான்னு பின்னாடி தெரிஞ்சது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு அன்று சிந்திய ரத்தம் படத்தில் ஜெய்சங்கர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

மேலும் உங்களுக்காக...