வடிவேலு இந்த மாதிரி எல்லாம் பண்ணினார்… லொள்ளுசபா சுவாமிநாதன் காட்டம்…

Published:

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் வடிவேலு. இவர் தமிழ் திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பின்னணி பாடகர் ஆவார். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களுடன் இணைந்து சிறு சிறு நாடகங்களை மேடையில் நடத்துபவர் வடிவேலு. அப்போதிலிருந்து நகைச்சுவை கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடைய தந்தை இறந்து விடவே வடிவேலு அவர்களின் குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சுமை வடிவேலு அவர்கள் மேல் இறங்கியது.

அதனால் மதுரையில் புகைப்பட கடையில் புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார் வடிவேலு. அப்போது நடிகர் ராஜ்கிரண் மதுரைக்கு வரும் பொழுது அவரின் அறிமுகத்தை பெற்ற வடிவேலு, அவருடன் சென்னைக்கு வந்து ராஜ்கிரண் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் பார்த்து வந்ததால், அவரின் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற வடிவேலு, 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தின் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமனார்.

1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் யாரித்து கதாநாயகனாக நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன்முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் வடிவேலு. அடுத்ததாக 1992 ஆம் ஆண்டு ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் விஜயகாந்த்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. அவரின் திறமையை பார்த்து விஜயகாந்த் அவர்களும் அவருக்கு உதவிகள் செய்தார்.

சின்ன கவுண்டர் படத்தில் வரும் குடை பிடிக்கும் பண்ணையாள் கதாபாத்திரத்தை வடிவேலுவிற்காகவே விஜயகாந்த் உருவாக்க செய்தார். இப்படி கிடைத்த வாய்ப்பு எல்லாம் பயன்படுத்தி கொண்ட வடிவேலு தனது விடாமுயற்சி, உழைப்பு, தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜ் நொடி பொழுதில் அனைவரையும் சிரிக்க வைக்கும் எதார்த்தமான காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். மீம் உலகின் அரசன் என்றால் அது வடிவேலு அவர்கள் தான். இப்போது வரும் பெரும்பாலான மீம்களில் வடிவேலு அவர்கள் புகைப்படம் இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் கொடுத்த முகபாவனைகளை வைத்து மீம்களை உருவாக்கி அது பிரபலம் அடைந்து வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களில் ஒருவர் லொள்ளு சபா சுவாமிநாதன். இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். 2000 களின் ஆரம்ப கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி ஆன லொள்ளு சபாவில் இவர் முக்கிய வேடங்களில் தோன்றியதன் மூலம் பிரபலமானார். அதன்மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கப்பெற்று நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘நவீன சரஸ்வதி சபதம்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் லொள்ளு சபா சாமிநாதன்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சுவாமிநாதன் வடிவேலு அவர்களை பற்றி காட்டமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் வடிவேலு அவரை விட வேறு எந்த நகைச்சுவை நடிகரும் மேலே வந்து விடக்கூடாது என்று நினைப்பவர். மற்ற சிறிய நகைச்சுவை நடிகர்களை மேலே வரவிடாமல் தடுக்கவும் செய்வார். என்னையும் அதேபோல தடுத்தார். ஆனால் சந்தானம், சூரி, விவேக் அவர்களெல்லாம் அப்படி இல்லை. அவர்கள் மற்ற நடிகர்களை ஊக்குவிக்க தான் செய்வார்கள் என்று காட்டமாக பேசியுள்ளார் லொள்ளு சபா சுவாமிநாதன்.

மேலும் உங்களுக்காக...