மணிரத்னம் 38 வருஷம் கழிச்சி கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தைக் கொடுக்கப் போகிறார். நிச்சயம் இது ஹிட்தான். அந்தளவு பெரிய ஹைப்பை உண்டாக்கியுள்ளார். அதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன், செக்கச் செவந்த வானம்னு தரமான படங்கள் கொடுத்துள்ளார். இன்னும் ஃபீல்டுல நின்னு சாதிக்கிறாரே என்ன காரணம்? இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் ஒரு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
மணிரத்னம் சினிமாவுல பல பேருக்கு மாஸ்டர். ஆனால் அவரு அப்படி தன்னைக் கருதிக் கொள்ளாமல் பாலுமகேந்திரா சொன்ன மாதிரி சொல்றாரு. பாலுமகேந்திரா தன்னை ஒரு சினிமா மாணவன்னு சொல்றாரு. பல பேருக்கு சினிமாவைக் கற்றுக் கொடுக்குற பேராசிரியர் அவரு. பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து பாலா, வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம், மீராகதிரவன்னு பலர் உருவானாங்க.
நான் வந்து சினிமாவைக் கற்றுக் கொடுப்பவன்னு தான் சொல்றாரு. சினிமா வந்து தொடர்ச்சியா அப்டேட் ஆகிக்கிட்டே இருக்கு. அப்படி அப்டேட் ஆகுற கலைஞர்கள் பழைய ஆளா மாற மாட்டாங்க. 80களில் மணிரத்னம் இயக்குனர் ஆகுறாரு. அவரோட அறிமுகமான யாருமே இப்ப சினிமாவுலயே கிடையாது. 80கள்ல அறிமுகமானவங்க 90லயே காணாமப் போயிடுறாங்க.
90கள்ல அறிமுகம் ஆனவங்க 2000த்துல காலி. 2000த்துல அறிமுகம் ஆனவங்க 2010ல காலி. தொடர்ச்சியா நீண்ட பயணம் மணிரத்னமுக்கு இருக்கக் காரணம் தொடர்ந்து தன்னைப் புதுப்பிப்பதுதான். புதிதாக சிந்திப்பது. புது ஐடியாவுக்குத் தயார்படுத்துவது. பழைய படங்கள்ல பெரிய கலைஞர்களுடன்தான் சேர்வாங்க. ஆனா இந்தப் படத்துல பாடலாசிரியர் கார்த்திக் மேத்தா. இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யணும்னு நினைக்கிறாரு.
இளைஞர்களுடன் வேலை செய்பவர்கள் தன்னையும் இளமையாகத் தக்க வைத்துக்கொள்வார்கள். அதுதான் மணிரத்னத்தின் புகழுக்குக் காரணம் என்கிறார் ராஜகம்பீரன்.