கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியாக இருக்கும். அதே நேரம் ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்காமலும் இருக்க முடியாது. சின்ன தொகை என்றால் திருப்பிக் கொடுத்து விடலாம். பெரிய தொகைன்னா எப்படி கொடுப்பது? இந்தப் பயம் நமக்கு தினம் தினம் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
கடன் கொடுத்தவன் எப்போ வருவானோ? அவனுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கவோ என ஒரு பயம் வரும். அந்தப் பயமே நமக்குள் புகுந்து உடல், மன ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும். குடும்பத்தலைவன் தான் கேப்டன். அவனே சரியாக இல்லாதபோது குடும்பத்தை எப்படி சீரும் சிறப்புமாக வழிநடத்துவது?
தொழில் முன்னேற்றம் இருந்தால் பொருளாதார சிக்கல் இருக்காது. எளிதாகக் கடனை அடைத்து விடலாம். அதற்கும் வழியில்லை. அதற்காக அப்படியே விட்டுவிடக்கூடாது. அதுக்கான முயற்சிகளை ஒருபுறம் எடுக்க வேண்டும். இன்னொருபுறம் ஆன்மிகம், பஞ்சாங்கம் நம்பி சில காரியங்கள் செய்ய வேண்டும். அப்படின்னா நாம செய்ய வேண்டியது ஒண்ணுதான். என்னன்னு பார்க்கலாமா…
செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கனம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி ) ஏதேனும் ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல – நாம் தரவேண்டிய முதலில் . அப்புறம் பாருங்கள் , அந்த கடன் சிறுக சிறுக அடைபட்டுவிடும்.
இதைப்போலவே ,விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்ச்சத்திரமும் கூடும் நாளில் திருப்பி கொடுத்தாலும் விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும். முயன்றுதான் பாருங்களேன். இங்கு எந்த கிழமையாக இருந்தாலும் ஓகே. எப்படி பார்ப்பது?….பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டும்.. இப்போது தான் மொபைல் போனில் பஞ்சாங்கம் பார்க்கலாமே….