அந்த 7 நாட்கள் போலவே ஒரு படம்.. அதுவும் கமல்ஹாசன் படம்.. ஒரு ஆச்சரிய தகவல்!

Published:

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படங்களில் ஒன்று அந்த ஏழு நாட்கள். இந்த படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் அம்பிகா ஆகிய இருவரும் காதலித்து இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அம்பிகா ராஜேஷை திருமணம் செய்து கொள்வார்.

அதன் பிறகு அம்பிகா மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரையும் ராஜேஷ் சேர்த்து வைக்க முயற்சி செய்யும்போது நம்முடைய கலாச்சாரம் இதை விரும்பாது என்று கூறி பாக்யராஜ், ராஜேஷுடன் அம்பிகாவை சேர்த்து வைத்துவிட்டு சென்றுவிடுவார். இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கிட்டத்தட்ட இதே கதை தான் ஐந்து வருடங்களுக்கு முன் அதாவது 1976 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது என்ற படம். புஷ்பா தங்கதுரை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது .  எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை திரைக்கதை வசனம் எழுதியிருந்த இந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார்.

பாக்யராஜ் இயக்கிய ஒரே த்ரில்லர் படம்.. மக்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்ததா?

oru oothappoo2 1

இந்த படத்தின் கதை என்னவெனில் கமல் மற்றும் சுஜாதா ஆகிய இருவரும் காதலிப்பார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது திடீரென கமல் காணாமல் போய்விடுவார். ஒரு வருடம் ஆகியும் கமல் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் வேறு வழி இன்றி சுஜாதா, விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வார்.

ஒரு வழக்கில் சிக்கி கமல் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்து திரும்பி வந்தபோது விஜயகுமார் மற்றும் சுஜாதா கணவன் மனைவியாக இருப்பார்கள். அப்போது சுஜாதாவை சந்திக்கும் கமல்ஹாசன் என்னால் உன்னை மறக்க முடியவில்லை, உன் நினைவாகவே நான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடுகிறேன், ஆனால் என்னுடன் ஒரே ஒரு நாள் வாழ வேண்டும். இருவரும் ஒரு நாள் மட்டும் சேர்ந்து இருப்போம் என்று கூறுவார்.

அதற்கு சுஜாதா ஒப்புக்கொண்டு ஒருநாள் கமல்ஹாசனுடன் சுற்றுவார். இருவரும் தவறு செய்ய சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் ஒருநாள் முடிந்ததும் மீண்டும் சுஜாதா வீட்டுக்கு வந்து விடுவார். அப்போது சுஜாதாவின் மனம் மாறும்.

படிக்காத மேதை டூ பேர் சொல்லும் பிள்ளை… வெற்றி பெறாத கமல் நடித்த ரீமேக் படம்…!!

மீண்டும் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்து, கமல்ஹாசனிடம் தன்னை அழைத்து செல்லுமாறு கூறுவார். கமலும் சுஜாதா வீட்டு வாசலில் வந்து நிற்பார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த கணவனை ஒரு முறை பார்த்துவிட்டு கமல்ஹாசனை நோக்கி செல்வார். வீட்டின் படியை தாண்டும் போது திடீரென விஜயகுமார் குரல் கேட்கும்.

oru oothappoo1 1

இது கண்ணகி, சீதா வாழ்ந்த நாடு. திருமணத்திற்கு முன் நீ எப்படி இருந்தாயோ தெரியாது. ஆனால் இப்போது நாம் இருவரும் கணவன் மனைவி. நம் கலாச்சாரத்துக்கு நீ மதிப்பு கொடுப்பதாக இருந்தால் நீ உன்னுடைய முடிவை மாற்றி கொள்ள வேண்டும் என்று கூறுவார். அதன்பிறகு சுஜாதா மனம் மாறி,  கணவனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்வார்.

கமல்ஹாசன் விஷபாட்டிலுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற காட்சியுடன் படம் முடியும். இந்த படத்தின் கிளைமாக்ஸ் கிட்டத்தட்ட அந்த ஏழு நாட்கள் போன்று அமைந்திருக்கும். ஆனால் அந்த 7 நாட்கள் போன்று இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1976 ஜூன் நான்காம் தேதி வெளியானது.

கமல், சுஜாதா மற்றும் விஜயகுமார் நடிப்பு அருமை என ஊடகங்கள் பாராட்டினாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் சிறந்த இயக்குனருக்கான விருது மற்றும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது எஸ்பி முத்துராமன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும்க்கும் இந்த படத்திற்கு கிடைத்தது.

சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!

இந்த படத்திற்கு தக்சிணாமூர்த்தி என்பவர் இசையமைத்திருந்தார். மூன்றே மூன்று பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் அதில் ஆண்டவன் இல்லா உலகம் இது, நல்ல மனம் வாழ்க ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆனது. மொத்தத்தில் கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தும் படமாக ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படம் இருந்தது.

மேலும் உங்களுக்காக...