ரஜினியின் 171 வது படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்ன தெரியுமா? அதில் ரஜினிக்கு அப்படி ஒரு கேரக்டரா?

Published:

ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அண்ணாத்த படத்தின் சறுக்கலுக்கு பின் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்தது. ரஜினியின் திரை வாழ்க்கைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த ஜெயிலர் படம் இதுவரை 650 கோடிக்கு மேல் வசூலை சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லைக்கா ப்ரொடெக்க்ஷன் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க உள்ளதாகவும், படத்தில் போலி என்கவுண்டர்களை கண்டறியும் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், பாகுபலி வில்லன் ராணா , துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி பிரம்மாண்ட இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்க்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி தலைவர் 171வது படத்தில் நடிக்க உள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை, அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்ற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் அவர்கள் ரஜினிக்கு தலைவர் 171வது படத்தின் கதை குறித்து கூறிய ஒன் லைன் ஸ்டோரி குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதை ஒரு நகர் புறத்துக்கு வெளியே ஒரு காலேஜ், அந்த காலேஜில் ஒரு காலத்தில் ப்ரொபஷராக இருந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. தற்பொழுது அவர் ரிட்டைடு ப்ரொபஷராகவும், அவர் முதல் முதலாக அந்த கல்லூரிக்கு தான் ஆசிரியர் பணிக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் அந்த காலேஜிலேயே பணிபுரிந்துள்ளார்.

அந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்வியும், ஒழுக்கத்தையும் கற்று கொடுத்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒரு மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் இது எல்லாமே முன் கதைதான். அப்பேற்பட்ட ரஜினி தற்பொழுது ரிட்டைடு ப்ரொபஷராக உள்ளார்.

ஆனால் ரஜினி எப்படி எல்லாம் அந்த காலேஜையும், காலேஜ் மாணவர்களையும் கட்டுப்பாடுடன் பார்த்துக்கொண்டாரோ அதுக்கு, மாறாக அந்த காலேஜில் பல சம்பவங்கள் நடக்க துவங்குகிறது.

குறிப்பாக அந்த காலேஜிலும், காலேஜ் சுற்றிலும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாடு தல விரித்து ஆடத் துவங்குகிறது. இந்த தகவல் ரஜினிக்கு ஒரு பெரிய தலைவலியை கொடுக்கிறது. போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் பைக்கில் வேகமாக செல்வதால் பல விபத்துகள் ஏற்பட தொடங்குகிறது, அது மட்டும் இல்லாமல் காலேஜில் அடுத்தடுத்து பல சூசைடுகள் நடக்க தொடங்குகிறது.

செப்டம்பர் 28 ஆம் தேதி மோதிக்கொள்ளும் படங்களின் லிஸ்ட்! இவ்ளோ படங்கள் ஒரே நாளா?

இதற்கு எல்லாம் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை தான் காரணம் என ரஜினி தெரிந்து கொள்கிறார். அதன் பின் மீண்டும் அதாவது கிட்டதட்ட ஒரு 40 வருடமாக ஒரு ப்ரொபஷராக இருந்த ரஜினி அவர்கள் மீண்டும் அந்த காலேஜுக்கு வருகிறார். அங்கு நடக்கும் கஞ்சா , ஹெராயின் இதுபோன்ற போதை பொருட்களை எப்படியெல்லாம் தடுக்கிறார் என்பது வைத்து தான் கதை அமைகிறது.

இந்த போதை பொருட்கள் விற்பனைக்கு பின் இருக்கும் வில்லன் கும்பல் யார் என கண்டுபிடித்து அதை அழிப்பது தான் ரஜினியின் வேலை. இந்த ஒன் லைன் கதை லோகேஷின் வழக்கமான கதையாகவும் ரஜினிக்கு பொருத்தமான கதையாகவும் உள்ளது.

 

மேலும் உங்களுக்காக...