சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!

கமல்ஹாசன் நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘வாழ்வே மாயம்’. இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். அதேபோல் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஸ்ரீதேவியும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

எண்பதுகளில் கமல், ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் என்றாலே சூப்பர் ஹிட் என்ற நிலையில் கே.பாலாஜி தயாரிப்பில் உருவான ‘வாழ்வே மாயம்’ திரைப்படத்திலும் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்தனர். வழக்கமாக பாலாஜியின் படம் என்றாலே நாயகன் பெயர் ராஜா மற்றும் நாயகி பெயர் ராதா என்று தான் இருக்கும். இந்த படத்திலும் அதுதான் நடந்தது.

ஒரே நாளில் வெளியான ரஜினி – கமல் இணைந்து நடித்த 2 படங்கள்.. அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்தார்களா?

ஸ்ரீதேவியை கமல் விரட்டி விரட்டி காதலிப்பார். பணத்துக்கு பஞ்சம் இல்லாதவர் என்பதால் ஸ்ரீதேவிக்காக நிறைய செலவு செய்வார். ஆனால் ஸ்ரீதேவி அவரை காதலிக்க மாட்டார். ஒரு வழியாக ஸ்ரீதேவியின் காதலை கமல் பெற்று விடுவார். ஆனால் ஸ்ரீதேவியை சின்ன வயதிலிருந்து திருமணம் செய்ய வேண்டும் என்று அவருடைய அண்ணன் ஜெய்சங்கரின் நண்பர் பிரதாப் போத்தன் முயற்சி செய்வார். இதனால் இந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் அண்ணன் ஜெய்சங்கர் எதிர்ப்பு தெரிவிப்பார்.

vazhve mayam

ஆனாலும் கமல், ஸ்ரீதேவி ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வார்கள். திருமண தேதி நெருங்கிக் கொண்டிருக்கும். அப்போதுதான் திடீரென தற்செயலாக மருத்துவ சோதனை செய்யும் கமல்ஹாசனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவரும். இன்னும் சில நாட்கள் தான் அவர் உயிரோடு இருப்பார் என்று கூறப்படும்.

இந்த நிலையில் தான் கமலுக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வரும். கமல்ஹாசன் ஒரு முறை அம்பிகாவை பெண்பார்க்க செல்லும்போது அவரது முகம் கமல்ஹாசனுக்கு ஸ்ரீதேவி போலவே இருக்கும், அதனால் சம்மதம் தெரிவித்து விடுவார். ஆனால் அதன் பின் சுதாரித்து திருமணத்திற்கு மறுத்துவிடுவார். அப்போது அம்பிகா ‘எனக்கு செவ்வாய் தோஷம் என்பதால் இதெல்லாம் எனக்கு சகஜம்தான், நீங்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழுங்கள்’ என்று சொல்வார். ஆனால் சில நாட்களில் அம்பிகாவுக்கு திருமணமாகி அவரது கணவர் இறந்து விடுவார். அம்பிகாவுக்கு திருமண பத்திரிகை கொடுக்க செல்லும்போதுதான் கமலுக்கு இந்த விஷயம் தெரிய வரும்.

vazhve mayam1

அம்பிகாவின் கணவருக்கு உயிரைக் கொல்லும் நோய் ஒன்று இருந்ததாகவும் ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து விட்டதால் அவர் இப்போது விதவையாக இருப்பதாகவும் கூறுவார். இதைக்கேட்டு ஸ்ரீதேவி கோபப்படுவார். இந்த சம்பவம் ஞாபகம் வந்ததால் தன்னை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டால் அவரும் விரைவில் விதவை ஆகிவிடுவார் என்று நினைத்து ஸ்ரீதேவியை வேண்டுமென்றே வெறுப்பார்.

எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!

தன் மீது வெறுப்பு வந்தால் தான் அவர் வேறொரு திருமணம் செய்து கொள்வார் என்பதற்காக விலைமாது ஸ்ரீபிரியா வீட்டுக்கு கமல் சென்று விடுவார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கமல்ஹாசனை உண்மையாகவே வெறுக்கும் ஸ்ரீதேவி, பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பார், திருமணமும் நடந்து விடும்.

திருமண கோலத்துடன் கமல் முன் நின்று அவரை பழிவாங்க வேண்டும் என்று ஸ்ரீதேவி நினைக்கும்போது தான் கமல்ஹாசனுக்கு புற்றுநோய் என்றும் அவர் வேண்டும் என்றே வெறுப்பை சம்பாதிப்பதற்காக நடந்து கொண்டார் என்றும் தெரியவரும். இதனை அடுத்து இறுதியில் ஸ்ரீபிரியாவுக்கு தாலி கட்டி விட்டு கமல்ஹாசன் இறந்து விடுவதுடன் சோகமான, சுகமான முடிவு இந்த படத்தில் இருக்கும்.

vazhve mayam2

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர், அம்பிகா, பிரதாப் போத்தன், மனோரமா என அனைவருமே இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்த படத்தின் டாக்டர் கேரக்டரில் தயாரிப்பாளர் பாலாஜி நடித்திருப்பார்.

கமல்ஹாசன் – சிங்கீதம் சீனிவாசராவ் கூட்டணியில் உருவான 6 படங்கள்.. எத்தனை சூப்பர்ஹிட்?

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை கேட்கும்போது அனைவரும் இசை இளையராஜா என்றுதான் சத்தியம் செய்து சொல்வார்கள். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராஜாவே’, ‘மழைக்கால மேகம் ஒன்று’, ’நீல வான ஓடையில்’, ‘வந்தனம் என் வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ ஆகிய ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...