குட்பேட் அக்லி அஜித், விஜய் ரசிகர்களை இணைத்துள்ளதா? இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
அஜித் நடிப்பில் நேற்று மாஸாகக் களமிறங்கிய படம் குட் பேட் அக்லி. இது ஒரு ஃபேன் பாய் மொமண்டாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அவரை அஜித்தே என்னை வெங்கட்பிரபுவுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷப்படுத்துற வகையில படம் எடுத்தது நீங்கதான்னு பாராட்டியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படத்தை இயக்கி விட்டார். இன்னொரு படமும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் பேமிலி ஆடியன்ஸைக் கொண்டாடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மதுரையில் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக வைக்கப்பட்ட பேனரில் அஜீத்தையும், விஜயையும் சேர்த்து ஒத்த உருவமாக மாத்திருக்காங்க. அந்தப் பேனர்ல நீயும் நானும் வேற இல்லடா… ரெண்டு பேரும் ஒத்த உசுருடான்னு எழுதிருக்காங்க. இந்த இரண்டு பெரிய சக்திகளும் ஒன்று சேர்ந்தால் அது செய்கிற விஷயங்களே வேற. அது நடக்கணும்னு விஜய் ரசிகர்கள் நினைக்கிறாங்க.

அஜீத் ரசிகர்கள் விஜய் ரசிகரைப் படத்துக்கு அழைத்துச் செல்கிறார்களாம். இன்டர்வல் பிளாக்கில் விஜயின் ஐ எம் வெயிட்டிங் டயலாக்கை அஜீத் நண்பா ஐ எம் வெய்ட்டிங்னு சொல்றாரு. சென்னை காசி தியேட்டர்ல கிட்டத்தட்ட 4000 மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பாக்கெட்டை மாலையாகத் தொடுத்து அஜித் பேனர்ல போட்டுருக்காங்க.
அப்புறமா இதை வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுப்பாங்க. இது வரவேற்கத்தக்க விஷயம். இந்தப் படத்தை விஜய் ரசிகர்களே வரவேற்கிறாங்க. அதனால இந்தப் படம் அஜித், விஜய் ரசிகர்களை சேர்த்து வைத்ததாகத் தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.