ஐபிஎல் உடன் போட்டி போட ஒரு தகுதி வேண்டாமா? பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

  2025 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், ஏப்ரல் 11 அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இஸ்லாமாபாத் யூனைடெட் மற்றும் லாஹோர் கலந்தர்ஸ் இடையேயான போட்டியுடன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக,…

ipl vs psl

 

2025 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், ஏப்ரல் 11 அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இஸ்லாமாபாத் யூனைடெட் மற்றும் லாஹோர் கலந்தர்ஸ் இடையேயான போட்டியுடன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக, இந்த T20 லீக் நேரடியாக இந்தியா நடத்தியுள்ள ஐபிஎல் போட்டிகளுடன் மோதும்.

முன்னைய ஆண்டுகளில், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பெரும்பாலும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, IPL-இன் நேரடி மோதலைத் தவிர்க்கவே இவ்வாறு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில், ICC சாம்பியன்ஸ் டிராஃபி காரணமாக, ஏப்ரல்-மே மாதங்களுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை பொருத்தவரை ஐபிஎல் உடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத நிலையில், உலகளாவிய பார்வையாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என உறுதியாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்து, போட்டிகளை இரவு 8 மணிக்கு தொடங்க முடிவு செய்துள்ளது. இது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் கழித்தே ஆகும். இதனால் குறைந்தது ஒரு மணி நேரம் நேரடி மோதலைத் தவிர்க்க முடியும் என்பதோடு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பும் அதிகமாகும்.

“இது சிறந்த முடிவு அல்ல என்பது எங்களுக்கு தெரியும், இருப்பினும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளுக்கு என ரசிகர்கள் உள்ளனர், போட்டிகள் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்,” என பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் எப்போதும் தரமான போட்டிகளை வழங்கி வந்துள்ளது. இந்த ஆண்டும் அதே தரம் இருக்கும். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் போட்டி என்கிற கேமென்று பார்த்தால் போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்னொரு நிர்வாகி கூறியபோது, ‘பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் இப்போது பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஒளிபரப்பின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடப்பதால், ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாத வெளிநாட்டு நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்வதில் அணிகளுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், இரண்டு புதிய அணிகளை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் 8 அணிகள் கொண்ட தொடராக மாறும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்து இருந்தாலும் ஐபிஎல் மற்றும் PSL ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் என்றும் ஐபிஎல் கிரிக்கெட்டுடன் மோதுவதற்கு PSL எந்தவிதத்திலும் தகுதி இல்லை என்றும் ஐபிஎல் முடிந்தவுடன் PSL தொடங்கலாம் என்றும் நடுநிலை கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்