குபேரா பட விழாவில் தனுஷ் ஏன் அவ்வளவு ஆவேசமாகப் பேசினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் ரஜினி மாதிரி பேச டிரை பண்ணினாரு. அது ரொம்பவே செயற்கைத்தனமா இருக்கு. தனுஷ் சில வருஷங்களுக்கு முன்னாடி அவரோட ஸ்டைல்ல தான் பேசிக்கிட்டு இருந்தாரு.
இப்போ திடீர்னு இப்படி பேசுனதுக்கு என்ன காரணம்? ஒருவேளை அரசியலுக்கு வரப்போறாரா? என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
குபேரா படவிழாவில் தனுஷ் ஏன் அத்தனை ஆவேசமாகப் பேசினார் என்பது இன்று வரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகத்தான் உள்ளது. ஏன்னா தனுஷ் அப்படி ஆவேசமாகப் பேசக்கூடிய நடிகர் இல்லை. அந்த மேடையில் அவர் அப்படி ஆவேசமாகப் பேசியதுதான் இன்றைக்கும் வித்தியாசமாகத் தெரிகிறது. அதனால்தான் வலைதளங்களில் பல மீம்ஸ்களில் அவரை ட்ரோல் செய்துள்ளனர். அந்தப் பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
தனுஷ் ரஜினி மாதிரி கோண வாயை வைத்துக் கொண்டு பேசினார் என புளூசட்டைமாறனே கலாய்த்திருந்தார். இதுசம்பந்தமான மீம்ஸ்களும் தெறிக்கவிட்டன.
மாமனார் ரஜினி சாயலில் பேசுகிறார் தனுஷ் என்று தான் அனைவரும் பேசினர். ரஜினி போல தத்துவங்களாக அவிழ்த்து விடுகிறார். பணம் ஒண்ணும் பெரிசு இல்ல. 100 ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கு 200 ரூபாய்க்கு பிரச்சனை வரும். 1 கோடி ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கு 2 கோடி ரூபாய்க்கு பிரச்சனை வரும்.
ஆக பிரச்சனை ஒண்ணுதான்னு எல்லாம் பேசியது வைரலானது. அதே போல என் மேல வதந்தியா பரப்புராங்க. எவ்வளவு வேணாலும் பரப்புங்க. ஒரு செங்கலைக்கூட உருவ முடியாது. எண்ணம்போல்தான் வாழ்க்கைன்னு சொன்னார். இதுவும் வைரலானது.