சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில பொட்டு வச்சின்னு பழைய பாடல் ஒன்று அற்புதமான மெட்டோடு வரும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய அழகோடு இருக்கும் ஒரு பெண் அழகாக ஜடை பின்னி பாவாடை, தாவணியுடன் பாரம்பரியம் மாறாமல் இருப்பார். அப்படிப்பட்ட சிகை அலங்காரத்தில் ஜடைப்பின்னல் தனித்துவம் வாய்ந்தது. இதற்குப் பின்னால் பல விஷயங்கள் ஒளிந்துள்ளன. என்னன்னு பார்க்கலாமா…
ஜடைப் பின்னலின் மகத்துவம் பின்னல் உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது free hair) அமங்களமானது எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாகச் செல்வர் அதன் பொருள் என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு இனி எந்த உறவும் எனக்கில்லை என்பதை குறிக்கிறது
மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது
நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. மேலும் துறவிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவதற்காக
ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர் ஆகையால் தலைவிரி கோலத்தைத் தவிர்ப்போம் இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது ஜடைப்பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கங்கை,யமுனைகண்களுக்கு புலப்படுகின்றன
ஒரு நதி (சரஸ்வதி) புலப்படுவதில்லை இதைப் போலவே பின்னலின் 3 பகுதிகளில் 2 பகுதிகளே புலப்படுகின்றன. ஜடைப் பின்னலின் வலது- பிறந்த வீடு, இடது-புகுந்த வீடு, நடுப்பகுதி-பெண். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருள்.
தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்து பவளே உயர்ந்தவள். ஜடைப் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவம்