நடிகர் தங்கவேலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படி ஓர் ஒற்றுமையா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்!

Published:

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் காமெடி இடத்தை நிரப்ப வந்தவர்தான் கே.ஏ. தங்கவேலு. குடும்ப வறுமை காரணமாக 10 வயது முதற்கொண்டு மேடை நாடகங்களில் நடித்தார் தங்கவேலு. நாடகங்களில் தங்கவேலுவுக்கு பெண் வேடம் பொருந்திப் போனதால், சிறுவயதில், அதிக அளவில், பெண் வேடங்களில் நடித்தார் தங்கவேலு.

டி.ஆர்.ரகுநாத் இயக்கிய, சிங்காரி என்ற தமிழ்ப்படம்தான், தங்கவேலுவுக்கு திருப்புமுனையாக அமைந்த முதல் படமாகும். இந்த படத்தில், தங்கவேலு, டணால் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அதை அவர் பேசிய விதம், மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அது முதற்கொண்டு டணால் தங்கவேலு என்றே அழைக்கப்பட்டார்.

கல்யாண பரிசு படத்தில், தங்கவேலு நகைச்சுவையை, யாரும் மறக்க முடியாது. அப்படத்தில், தனக்கு ஜோடியாக நடித்த நடிகை எம் சரோஜாவை, இரண்டாம் தாரமாக, திருப்பரங்குன்றத்தில், திருமணம் செய்து கொண்டார் தங்கவேலு. இருவரும் இணைந்து சுமார் 50 படங்களில் நடித்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாம்பாள் ஆவார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், தங்கவேலுவுக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. அதாவது நடிகர் தங்கவேலு, எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படத்தில்தான் அறிமுகம் ஆனார். மேலும் எம்ஜிஆர் 17.1.1917 ஆம் ஆண்டில் பிறந்தார். தங்கவேலு 15. 1.1917 ஆம் ஆண்டில் பிறந்தார். இவ்வகையில் எம்ஜிஆரை விட, இரண்டு நாட்கள் வயதில் மூத்தவர் தங்கவேலு. எம்ஜிஆருக்கு முதல் பட வாய்ப்பு பெற்றுத் தந்த, எம்.கே.ராதா தான், தங்கவேலுவுக்கும், முதல் பட வாய்ப்பு பெற்றுத் தந்தார்.

பாரதியார் வேடத்திற்கு முகவரி கொடுத்த பழம்பெரும் நடிகர்… இப்படி ஒரு நடிகரை கொண்டாடத் தவறிய தமிழ் சினிமா

எம்.ஜி.ஆரை போலவே தமிழ் படங்கள் தவிர பிறமொழி படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தார் நடிகர் தங்கவேலு. மேலும் திமுகவில் இருந்து பின் அஇஅதிமுக வை துவக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால் தங்கவேலு இறுதிவரை, திமுகவின் தீவிர விசுவாசியாகவும் இருந்தார்.

கலைவாணர் தயாரித்த பணம் படத்தில் நடித்ததற்காக, தங்கவேலுவிற்கு கலைவாணர், 5000 ரூபாய் சம்பளமாக வழங்கினார். 1952 ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது. இப்படம் வெளிவருவதற்கு முன்பு வரை நாடகங்களில் நடிப்பதற்கு தங்கவேலு வாங்கிய மாதச் சம்பளம் பத்து ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தங்கவேலு, தனது 50 ஆண்டுகால திரை உலக வாழ்வில், சுமார் 1250 படங்கள் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...