சினேகா பற்றிய உண்மைய உடைத்த பயில்வான் ரங்கநாதன்.. பிரசன்னாவுக்கு முன் ஏற்கனவே நின்று போன திருமணம்

Published:

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பலர் இருந்தாலும் இவற்றில் சினேகா-பிரசன்னா ஜோடி எப்பவுமே தனி ரகம் தான். மகாராஷ்டிராவை தாயகமாகக் கொண்ட சிநேகா தமிழில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படம் வெளியாக தாமதமானதால் என்னவளே படம் இவருக்கு முதல் படமாக அமைந்தது. அதனையடுத்து வந்த ஆனந்தம் படம் இவருக்கு நல்ல புகழைக் கொடுத்தது.

இதனையடுத்து கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்கள் இவருக்கு குவிய பான் இந்தியா சினிமா உலகில் புன்னகை அரசியாகத் திகழ்ந்தார்.

நடிகர் தங்கவேலுவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்படி ஓர் ஒற்றுமையா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்

விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்த சினேகா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் விஜய் நடிக்கும் GOAT படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இவர் இணைந்து நடித்தார். இப்பட ஷுட்டிங்கில் இவர்கள் இருவரும் காதல்வயப்பட்டனர். 3 வருட காதலுக்குப் பின் 20123-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சினேகா குறித்த உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதாவது நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வேறொருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் நாக் ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அனைவர் முன்பும் மோதிரம் மாற்றப்பட்டது.

“தோட்டுக்கடை ஓரத்திலே.., ஒண்ணாம் படி எடுத்து..,“ நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். நாக் ரவி திருமணம் செய்யவில்லை என்றும் நிச்சயத்தோடு திருமணம் நின்றுவிட்டதாகவும் சினேகா அப்போது அறிவித்து இருந்தார். ஆனால், எந்த காரணத்திற்காக நாக் ரவியை சினேகா வேண்டாம் என்று சொன்னார் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...