பாரதியார் வேடத்திற்கு முகவரி கொடுத்த பழம்பெரும் நடிகர்… இப்படி ஒரு நடிகரை கொண்டாடத் தவறிய தமிழ் சினிமா!

Published:

விடுதலைப் பேராட்ட வீரரும், தேசியக் கவியுமான பாரதியாரின் முகத்தப் பார்க்காதவர்களுக்கு இவர் முகமே அறிமுகம். பாரதியார் எப்படி இருப்பாரோ அதே போல் நடை, உடை, பாவணை என அனைத்திலும் பாரதியாராகவே வாழ்ந்து தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் நீங்கா இடம் பெற்றவர். அவர்தான் எஸ்.வி.சுப்பையா. நாடக  மேடையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த திரையுலக மகாபாரதி.

பழம்பெரும் நடிகர் எஸ் வி சுப்பையா நினைவு நாள் ஏ வி எம் புரொடசன்சின் முன்னோடியான பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த விஜயலட்சுமி (1946) படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்து இவர் ஜுபிடர் பிக்ச்சர்ஸ் தயாரித்து கோவை அய்யமுத்து மற்றும் டி. ஆர். கோபு இயக்கிய கஞ்சனில் (1947) நடித்தார். பின்னர், அவர் அபிமன்யுவில் சகுனியாக நடித்தார், இதில் எம். ஜி. ராமச்சந்திரன் அர்ஜுனனின் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் விஜய்.. மா.செ. கூட்டத்தில் நடந்த அந்த முக்கிய நிகழ்வு..

சுப்பையாவுக்கு திருப்புமுனையாக காலம் மாறிப்போச்சு (1956) படம் அமைந்தது. அதில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் இவரது குணச்சித்திர நடிப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தது. இது இவரது எதிர்கால படங்களில் நல்லபாத்திரங்களை பெற்றுத்தர வாய்பாக இருந்தது. தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களிடையே இவரது பாத்திரம் எப்போதும் பசுமையாகவே இருக்கும்படியான பல படங்கள் இருந்தாலும், வரலாற்றுப் படமான கப்பலோட்டிய தமிழன் (1961) படத்தில் இவர் நடித்த பாத்திரம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இந்தப் படத்தில் இவர் சுப்பிரமணிய பாரதியாக நடித்தார்.

பாரதியாக நடித்த இவரது பாணியை சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை, எதிர்கால படங்களில் பாரதி வேடத்தில் தோன்றிய, பல கலைஞர்கள் பின்பற்றினர். நடிப்பு மட்டுமல்லாது சுப்பையா வேளாண்மையிலும் தனியாத ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை செங்குன்றம் அருகிலுள்ள கரணோடையில் நிலத்தை வாங்கி அதை ஒரு பண்ணையாக மாற்றினார். இவருக்கு (திரைப்பட) படப்பிடிப்பு இல்லாதபோது, தனது பண்ணையில் வேலை செய்வார்.

அல்லு அர்ஜுன் இத்தனை கோடிக்கு அதிபதியா? மலைக்க வைக்கும் சொத்து விபரம்..!

இவர் ஆழ்ந்த சமய நம்பிக்கைக் கொண்டவராகவும், வாழ்க்கையில் சில கொள்கைகளைக் கொண்டவராகவும் இருந்தார். இரவு 9 மணிக்குப் மேல் இவர் வேலை செய்ய மாட்டார். படிப்பதில் ஆர்வமுள்ளவர் மற்றும் ஜெயகாந்தனின் தீவிர வாசகர். உடல்நலக்குறைவு காரணமாக செங்கோட்டையில் பிறந்த இவர் செங்குன்றத்தில் உள்ள தனது பண்ணையில் இறந்தார்.

மேலும் உங்களுக்காக...