பிக்பாஸ் வீட்டிற்குள் புதியதாக வரப்போகும் போட்டியாளர் இவர்கள் இருவரில் ஒருவரா?

Published:

BIGG BOSS: கமல்ஹாசன் நடுவராக இருந்து வழி நடத்தும் ரியாலிட்டி ஷோ ’பிக்பாஸ்’. இதில், கலையுலகத்தின் பல்வேறு துறைகளில் இருந்து 13 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்க வைப்பார்கள்.

ஒன்றாக இருக்கும் ஹவுஸ் மேட் அனைவரும் அவர்களே சமைத்து, சுத்தம் செய்து, நண்பர்களை உருவாக்கி, ஒருவருக்கொருவர் ஆதரவாக அல்லது சண்டையிட்டு கொண்டு என ஹவுஸ் மேட்கள் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

ஹவுஸ் மேட் அனைவரும் எப்படி ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதை வைத்து 100 நாட்களுக்கு பின் ஒரு வின்னர் மற்றும் ரன்னரை தேர்ந்தெடுப்பார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவங்களை கமல்ஹாசன் ரிவ்யூ செய்வார். எலிமினேஷன் ரவுண்டுகள் மூலம் தகுதியற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப் படுவார்கள்.

’ Wildcard ’என்ட்ரி மூலம் சிலர் பங்கேற்பாளர்களாக வருவார்கள். பொதுமக்கள் தங்களுடைய ஓட்டிங் மூலம் யாரை வெளியேற்ற வேண்டும் அல்லது யார் வெற்றி பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.

டைரக்டராக வேண்டிய சித்தார்த் நடிகரானது எப்படி?

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் – 7ல் கூல்சுரேஷ், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, ரவீனா, நிக்சன், விஷ்ணு தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா, மாயா கிருஷ்ணன் விஷ்ணு விஜய், சரவணன் விக்ரம், யுகேந்திரன், விசித்திரா, அனன்யா, விஜய் வர்மா, பவா செல்லத்துரை என பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்று வந்தனர்.

சர்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டில், பிரதீப் மற்றும் ஜோவிகாவின் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது. மேலும், தற்போது பிக்பாஸிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள். அதில், ஒருவர் அனன்யா இவருக்கு மக்களிடம் இருந்து ஓட்டிங் மூலம் சரியான ஆதரவு கிடைக்காததால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பவா செல்லத்துரை தனக்கு பிக்பாஸ் சரிபட்டு வராது என்று அவராகவே கிளம்பி விட்டார். இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், ’wildcard’ மூலம் புது போட்டியாளர்கள் பபிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

பிசாசு -2 இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி!

இந்த சமயத்தில், பிக்பாஸ் டீமில் இருந்து விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கு கிஃப்ட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான வி.ஜே அர்ச்சனாவும் wildcard மூலம் எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாஞ்சில் விஜயனா? அல்லது வி.ஜே அர்ச்சானாவா? யார் wildcard எண்ட்ரி கொடுப்பார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் உங்களுக்காக...