பிசாசு -2 இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி!

நான் மகான் அல்ல, புதுப்பேட்டை இந்த இரண்டு படங்களிலும் திரையின் ஓரமாக அல்லது கூட்டோத்தோடு கூட்டமாக நிற்கும் நபராக இருந்தவர் விஜய் சேதுபதி.

தென்மேற்கு பருவகாற்று, வெற்றி பெற்றாலும், கமர்ஷியல் ஹிட் கொடுத்தது கார்த்திக் சுப்புராஜின் ’பீட்சா’ படம்தான் பின் நலன் குமாராசாமியின் ‘சூது கவ்வும்’ படமும் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்புத்திறனைக் காட்டியது. பல படங்கள் தொடர்ந்து நடித்து வந்த விஜய் சேதுபதி, ‘நானும் ரவுடி தான்’ படத்திற்கு பிறகு அசைக்க முடியாத உயரத்துக்கு சென்றார்.

ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல், கதாபாத்திரத்தின் தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றி நடிப்பதற்கு ஏற்ற ஆளாக இருப்பதே அவரின் சாதனை. வில்லனாக, தந்தையாக, வயதானவராக எந்த ரோலாக இருந்தாலும் சீர் பட செய்வதில் விஜய் சேதுபதி வல்லவர். விக்ரம் மற்றும் மாஸ்டரில் வில்லனாக கலக்கியவர். ஒரே சமயத்தில் விக்ரமில் வில்லனாகவும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் காதல் நாயகனாகவும் நடித்து மக்கள் ரசிக்கும்படி செய்திருப்பார்.

மாவீரனில், பின்னணியில் கதை சொல்லிக் கொண்டே இருப்பார், இப்படி ஒரு கலைஞனாக பல பக்கங்களிலும் செயல்படுபவர். இவருடைய அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் மிஷ்கின் மாறுபட்ட படங்களை திரைக்கு கொண்டுவர நினைப்பவர்.

புத்தகங்கள் மீது பெரும் காதல் கொண்டதால், சண்முக ராஜா எனும் பெயரை, ரஷ்ய நாவலில் வரும் கதாநாயகனின் கேரக்டரால் ஈர்க்கப்பட்டு, அந்தப்  பெயரை தனக்கு வைத்துக் கொண்டார். . சித்திரம் பேசுதடி படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானார். ‘அஞ்சாதே’, ‘பிசாசு’ படங்களை இயக்கினார்.  நந்தலாலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதில், மனநலம் பாதிக்கப்பட்டவராக சிறப்பாக நடித்திருப்பார். ஜப்பானின் பெரும்புகழ் பெற்ற இயக்குனர் ‘அகிரா குரோசோவா’. அவருடைய படங்களால் ஈர்க்கப்பட்டு அகிராவின் வழிமுறையை மிஷ்கின் பின்பற்றி வருகிறார். இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகராகவும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

2014ல் நல்ல வரவேற்பை பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.