கமல், ரஜினியை காக்க வைத்த நடிகை.. ஒரு கிராமத்தை தத்தெடுத்த அதிசயம்..!

Published:

ஒரு காலத்தில் கமல், ரஜினியையே கால்ஷிட்டிற்காக காக்க வைத்த நடிகை தற்போது ஒரு கிராமத்தை தத்தெடுத்து பல சமூக சேவை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்தான் நடிகை டிஸ்கோ சாந்தி.

’ரோஜா மலரே ராஜகுமாரி’ என்ற பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த பாடலில் நடித்த பழம்பெரும் நடிகர் ஆனந்தன் மகள் தான் டிஸ்கோ சாந்தி.

ஒரே நடிகருடன் ஜோடியாக 130 படங்கள்.. கின்னஸ் சாதனை செய்த நடிகை..!

தமிழ் திரையுலகில் கிளாமர் டான்ஸ் ஆடுவதற்கு சில்க் ஸ்மிதா மிகவும் புகழ் பெற்றிருந்த நிலையில் அவருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் டிஸ்கோ சாந்தி.

சில்க் ஸ்மிதா மற்றும் டிஸ்கோ சாந்தி இருவரும் போட்டியாளர்கள் போல் தெரிந்தாலும் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

disco shanthi2

கமல், ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்களை விட  டிஸ்கோ சாந்தியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

முறையான நடனம் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பின்னாளில் அவர் முறையான நடனத்தை கற்றுக் கொண்டார். அவரது டான்ஸுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

13 வயதில் 13 குழந்தைகளை காப்பாற்ற நடிக்க வந்தவர்.. சரத்பாபு முதல் மனைவி ரமா பிரபாவின் சோக வாழ்க்கை..!

தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பானவர் டிஸ்கோ சாந்தி என்றும் குறிப்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகவும் இணக்கமாக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கூட பத்திரிகையாளர்கள் அவரது ஐதராபாத் வீட்டுக்கு சென்றால் அவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும் என்பதும் பலரது அனுபவமாக உள்ளது.

இந்த நிலையில் டிஸ்கோ சாந்திக்கு போட்டியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அனுராதா. ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா ஆகிய மூவரும் மாறி மாறி பிரபல நடிகர்களின் படங்களில் பாடல்களுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திரைப்பட கல்லூரி மாணவர் ஆபாவாணன் இயக்கத்தில் உருவான ’ஊமை விழிகள்’ என்ற திரைப்படத்தில் ராத்திரி நேரத்து பூஜை என்ற பாடலுக்கு டிஸ்கோ சாந்தி நடனம் ஆடினார். அந்த படம் தொடங்கிய அடுத்த நொடியே இந்த பாடல் திரையில் தோன்றும் என்பதும் அது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த பாடலுக்காகவே பலமுறை பார்த்த ரசிகர்கள் உண்டு.

disco shanthi1

அதேபோல் கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா என்ற திரைப்படத்திலும் ஒரு பாடலில் அவர் சிறப்பாக ஆடி இருந்தார்.  இந்த நிலையில் மோகன்லால் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று எனவே நீங்கள் திருவனந்தபுரம் வாருங்கள் என்று கூறியபோது, என்னால் திருவனந்தபுரம் வரமுடியாது நான் பிஸியாக இருக்கிறேன், வேண்டுமென்றால் மோகன்லாலை சென்னைக்கு வர சொல்லுங்கள், நான் அந்த பாடலுக்கு நடனம் ஆகிறேன் என்று டிஸ்கோ சாந்தி சொன்னதாகவும் இதனை அடுத்து மோகன்லால் சென்னைக்கு வந்து டிஸ்கோ சாந்தியின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.

புகழின் உச்சத்தில் இருந்த டிஸ்கோ சாந்தியை திடீரென தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். தற்செயலாக அவரை கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற தொழிலதிபர் திடீரென தாலியை எடுத்து சாமி சன்னதி முன்னிலையில் டிஸ்கோ சாந்திக்கு கட்டிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத டிஸ்கோ சாந்தி அதிர்ச்சி அடைந்தாலும் அதன் பின் அவரை கணவராக ஏற்றுக் கொண்டார். இருவரும் ஹைதராபாத்தில் குடியேறினர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து சில நாட்களில் இறந்து விட்டது. அது இருவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த பெண் குழந்தையின் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து பல சமூக சேவைகளை டிஸ்கோ சாந்தி செய்து வருகிறார்.

ஹைதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை அவர் தத்தெடுத்துள்ளதாகவும் அந்த கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் அவர் தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளியை தத்தெடுத்துள்ளார், பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளார், பெண் குழந்தைகளின் கல்விக்கும் அவர் உதவி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒருமுறை ஹைதராபாத்துக்கு ரஜினிகாந்த் ஷூட்டிங் சென்றபோது டிஸ்கோ சாந்தி வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது தான் டிஸ்கோ சாந்தியின் ரசிகர் என்று கூறியதை அவரது கணவர் ஆச்சரியத்துடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

டிஸ்கோ சாந்தியின் சகோதரி தான் நடிகை லலிதகுமாரி என்பதும் இவர் நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

இந்த நிலையில் டிஸ்கோ சாந்தியின் கணவர் சமீபத்தில் எதிர்பாராத விதமாக காலமான நிலையில் அந்த துயரத்தில் இருந்து இன்னும் அவர் மீள முடியாமல் தனிமையில் தனது வாழ்வை கழித்து வருகிறார். ஒரு காலத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது நடனத்தால் மகிழ வைத்தவர் இன்று பெரும் சோகத்துடன் கணவரை இழந்து தனிமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...