ஒரே நடிகருடன் ஜோடியாக 130 படங்கள்.. கின்னஸ் சாதனை செய்த நடிகை..!

ஒரு நடிகருக்கு ஜோடியாக 5 படங்கள் நடிக்கலாம், 10 படங்கள் நடிக்கலாம், ஏன் சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் 20, 30 படங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நடிகருக்கு 130 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை குறித்து இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி ஒரு நடிகை இருக்கிறார். அவர் தான் பிரபல மலையாள நடிகை ஷீலா.

கேரளாவை சேர்ந்த நடிகை ஷீலா பிரபல மலையாள நடிகர் பிரேம் நசீர் உடன் இணைந்து 130 படங்களில் நடித்துள்ளார். இவர் மொத்தம் சுமார் 500 படங்களில் நடித்துள்ள நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு பிரேம் நசீருடன் மட்டும் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 வயதில் 13 குழந்தைகளை காப்பாற்ற நடிக்க வந்தவர்.. சரத்பாபு முதல் மனைவி ரமா பிரபாவின் சோக வாழ்க்கை..!

sheela2

கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் பிறந்தவர் ஷீலா. அதன் பிறகு அவர் ஊட்டியில் தான் பெரும்பாலும் பள்ளி காலங்களில் வளர்ந்தார். இதனை அடுத்து 13 வயதில் எஸ்எஸ் ராஜேந்திரன் நாடக குரூப்பில் இணைந்து நடித்தார். அதன் பிறகு 17 வயதில் எம்ஜிஆர் நடித்த ’பாசம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அறிமுகமானார்.

பின்னர்  அவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் மலையாள திரை உலகம் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. மலையாளத்தில் மட்டும் அவர் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஷீலா நடிப்பில் உருவான ‘செம்மீன்’ என்ற மலையாள திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்று தந்தது.

இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!

sheela

நடிகை ஷீலா, பிரேம் நசீருடன் 130 படங்களில் நடித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகில் எந்த நடிகரும் நடிகையும் இத்தனை படங்களில் இணைந்து நடித்ததில்லை என்பதும், இனிமேல் இப்படி ஒரு சாதனையை எந்த நடிகையும் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷீலா, சேவியர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு சில ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு கடைசி வரை அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

இவருக்கு ஜார்ஜ் விஷ்ணு என்ற ஒரு மகன் உள்ளார். அவரும் சில தமிழ் படங்களிலும் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.

புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

நடிகை ஷீலா ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ அகிலாண்டேஸ்வரி என்ற முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...