புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று கூறப்படும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருடனும் நெருக்கமாக இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட அமலா கடைசியில் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை அமலா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவரை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது டி ராஜேந்தர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ’மைதிலி என்னை காதலி’ என்ற படத்தில் அவர் அறிமுகம் ஆகி அதன் பின்னர் அந்த படத்தின் வெற்றியின் காரணமாக ’மெல்ல திறந்தது கதவு’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை..!

அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார் என்பதும் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருடனும் அதிக படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

amala2

குறிப்பாக ’வேலைக்காரன்’ திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்தபோது திரையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாகவும் ரஜினி அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கள் எழுதப்பட்டன. ஆனால் அது கடைசி வரை அது வதந்தியாகவே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’ சத்யா’ ’வெற்றி விழா’ ‘பேசும் படம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் போதும் அவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டார். ஆனால் திருமண விஷயத்தில் உறுதியாக இருந்த நடிகை அமலா நாகார்ஜுனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

16 வருஷம் ஒண்ணா வாழ்ந்தும் குழந்தை இல்லை.. நடிகை ரேவதியின் விவாகரத்துக்கு என்ன காரணம்?

திருமணத்திற்கு பின்னர் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்ட அமலாபால் நடிப்பில் இருந்தும் கிட்டத்தட்ட விலகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பல நல்ல வாய்ப்புகள் வந்தபோதிலும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை, எனக்கு குடும்பம் தான் முக்கியம் என நடிப்பில் இருந்து விலகிவிட்டார்.

amala1

கடந்த 1991ல் திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரே தமிழ் படம் சமீபத்தில் வெளிவந்த ’கணம்’ என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று மிகப்பெரிய அளவில் பிசியாக இருந்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

18 வயதில் கொடிகட்டி பறந்த நடிகை திவ்யபாரதி.. 19 வயதில் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

நடிகை அமலா விலங்குகள் நல ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் விலங்குகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பதும் தனது வீட்டிலேயே பல செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews