700 படங்கள் நடித்தும் ஏழையாகவே இருக்கும் குண்டு கல்யாணம்.. இன்னும் வாய்ப்புக்காக காத்திருப்பு..!

Published:

தமிழ் திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கார் வீடு பங்களா என செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் தமிழ் திரை உலகில் 700 படங்கள் நடித்தும் இன்னும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்றால் அவர் தான் நடிகர் குண்டு கல்யாணம்.

நடிகர் குண்டு கல்யாணம் மதுரையை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். இவரது தந்தை குண்டு கருப்பையா நாடகம் மற்றும் பல சினிமாக்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் உடன் அவர் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார்.

அப்பா நாடகத்தில் நடித்தவர் என்பதால் இவருக்கு இயற்கையிலேயே கலை ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தை புரிந்து கொண்ட குண்டு கருப்பையா தனது மகனை மூன்று வயதிலேயே நாடகத்தில் நடிக்க வைத்தார். இதனை அடுத்து சின்ன சின்ன கேரக்டரில் நாடகங்களில் நடித்து வந்த குண்டு கல்யாணம் ஒரு முறை கே பாலச்சந்தர் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்கச் சென்றார்.

பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ.. தெலுங்கில் காமெடி நடிகர்… சுதாகர் கடந்து வந்த திரை வாழ்க்கை..!!

அப்போது அங்கு நடிகை லட்சுமியை சந்தித்ததை அடுத்து அவரது இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் ‘மழலைப்பட்டாளம்’. முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தில் குண்டு கல்யாணம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்த அவன் அவள் அது என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு அவர் தில்லுமுல்லு, போக்கிரி ராஜா போன்ற ரஜினிகாந்த் படங்களிலும் சிம்லா உள்ளிட்ட கமல்ஹாசன் படங்களிலும் நடித்தார். 1980 முதல் 2000 வரை அவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் அவருக்கான சம்பளம் மிகவும் குறைவாகவே கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் நான் அதிகபட்சமாக ஒரு திரைப்படத்திற்கு 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் தான் சம்பளம் வாங்குவேன் என்றும் அந்த சம்பளம் வீட்டு செல்லவுக்கே போதாத நிலை இருந்தது என்றும்  குறிப்பிட்டு இருந்தார். குண்டு கல்யாணம் நடித்த 700 படங்களில் அதிகபட்ச படங்களில் அவர் மிக குறைவான சம்பளமே வாங்கியுள்ளார்.

இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா …!

இந்த நிலையில் நடிகர் குண்டு கல்யாணம் கடந்த 1989 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு யோகலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் துணை இயக்குனராக இருந்து வரும் நிலையில் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகிறார். மேலும் நடிகர் குண்டு கல்யாணம் நாங்க புதுசா, நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்களில் அவரது மகள் முக்கிய கேரக்டரில் நடித்ததோடு துணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கையில் இவர் விருது வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி எம்ஜிஆரிடம் உள்ள பற்று காரணமாக அவர் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் இவர் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்றாலும் அதன் பிறகு மீண்டும் அவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துவிட்டார்.

இந்த நிலையில் நடிகர் குண்டு கல்யாணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தான் சம்பாதித்த பெரும் பகுதியை சிகிச்சைக்காகவே செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. சினிமா திரையில் உள்ளவர்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் 2000 ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இன்றைய இளம் இயக்குநர்கள் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியை பார்த்த நாம் இருவர் நமக்கு இருவர் தொலைக்காட்சி குழுவினர் அவருக்கு மனநல மருத்துவர் என்ற கேரக்டரை கொடுத்தனர்.

5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

இதனை அடுத்து சமீபத்தில் வெளியான பாபா பிளாக்‌ஷிப் என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 700 படங்களுக்கும் மேல் நடித்த குண்டு கல்யாணம் இன்னும் நடிப்பில் ஆர்வமாக இருப்பதால் இளம் இயக்குனர்கள் அவருக்கேற்ற வாய்ப்பை கொடுக்குமாறு அவரது வட்டாரங்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...