பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ.. தெலுங்கில் காமெடி நடிகர்… சுதாகர் கடந்து வந்த திரை வாழ்க்கை..!!

பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தமிழ் திரையுலகில் பல ஆண்டுகள் நல்ல நிலையில் இருந்து உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட சுதாகர் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி நாயகனாக இருந்த நிலையில் திடீரென அவர் தெலுங்கு திரை உலகில் காமெடி நடிகராக மாறியதுதான் பெரும் ஆச்சரியம்.

நடிகர் சுதாகர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பாக சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் இணைந்து நடிப்பு கலையை பயின்றார். அவருடன் நடிப்பு கலையை பயின்றவர்களில் ஒருவர்தான் சிரஞ்சீவி. சிரஞ்சீவிக்கு முன்பே அவர் கிழக்கே போகும் ரயில் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் தான் சுதாகர் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் தான் நடிகை ராதிகாவும் அறிமுகம் ஆனார்.

சிவாஜி – ரஜினி இணைந்த முதல் படமே தோல்வி படமா..? இதுதான் காரணமா..?

முதல் படமே சுதாகருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு அவருக்கு நாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக வலம் வந்தன.

தமிழ் திரையுலகில் நடிகர் சுதாகர் 5 ஆண்டுகளில் சுமார் 50 படங்களில் நடித்தார். அதேபோல் முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதிகாவுடன் மட்டும் அவருடன் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்தார்.

images 63

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோ.. சூப்பர்ஹிட்டான ஆச்சரியம்..!

இந்த நிலையில் தான் நடிகர் சுதாகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரை தமிழ் திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்தது. இதனை அடுத்து அவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு ஓரிரு படங்களில் அவர் இரண்டாம் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு காமெடி நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தெலுங்கு திரை உலகில் காமெடி நடிகராக நடித்தார். தமிழில் அவர் 1982 ஆம் ஆண்டு மாமியாரா மருமகளா என்ற படத்தில் நடித்த பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 1988 ஆம் ஆண்டு தான் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களும் சரியாக அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனை அடுத்து 1990 ஆம் ஆண்டு ரஜினியுடன் அதிசய பிறவி என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் அவர் தமிழில் நடிக்கவில்லை. டி ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் தான் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் ஒரே ஒரு படம் நடித்த குஷ்பு .. லாஜிக் இல்லாமல் போன கேப்டன் மகள்..!!

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென சுதாகர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால் அவரே ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்து நான் நலமாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறி எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ரசிகர்களுக்காக நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...